Gistak Media – Cinema News | Trending News | Latest News

Turtle Pet: செல்ல பிராணிகலாகும் ஆமைகள்

இயல்பாக மனிதர்கள் தங்கள் வீடுகளில் (Pet Animals) என்று சொல்லக்கூடிய செல்ல பிராணிகளை வளர்ப்பார்கள். பெரும்பான்மையாக நாய், பூனை, பசு, முயல், கோழி, புறா, கிளி இவைகளை வளர்ப்பார்கள். இதில் சிலரே யானை, குதிரை, குரங்கு, பாம்பு என்று தங்களுக்கு பிடித்த உயிரினங்களை வித்தியாசமாக வளர்ப்பார்கள். இவையெல்லாம் பொழுது போக்கிற்காகவும், அவரவர் விருப்பம் மற்றும் ஆசைக்காக வளர்க்கின்றனர்.

சிலர் நீர் வாழ் உயிரியான மீனை வளர்ப்பார்கள்.ஆனால், மீனை தவிர வேறெந்த நீர்வாழ் உயிரினங்களையும் செல்ல பிராணியாக வளர்ப்பதில்லை. இருப்பினும் இந்த வரிசையில் தற்போது ஆமைகள் (Turtle) பிரபலமாகி வருகிறது. முந்தய கால கட்டத்தில் ஆமை வீட்டிற்குள் வரவே கூடாது, ஆமை (Turtle) புகுத்த வீடு விளங்காது  என்றெல்லாம் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது. தற்போது அந்நிலை மாறியுள்ளது. மூடநம்பிக்கைகள் மறைந்து செல்லப்பிராணி பிரியர்கள் ஆமைகளையும் (Turtle Pet) தங்களின் வீட்டில் வளர்க்கிறார்கள்.  

ஆமைகளின் வாழ்க்கை முறை:

உலகில் படைக்கப் பட்ட அனைத்து உயிரினங்களும் அதிசயமானது தான். அவற்றை ஆச்சர்யத்துடன் ரசித்துப் பார்த்தால் ஆழமான பெரும் விஷயம் இருக்கும். அதில் ஒன்றுதான் ஆமை (Turtle). ஆமை என்றாலே கெட்ட சகுனம் என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் அதில் நிறைய ஆச்சரியங்கள் குவிந்துள்ளது. ஆமையைப் பற்றி புரிதல் இல்லாதவர்களே இவ்வாறு சொல்கிறார்கள்.

எல்லா விலங்குகளும் மழை பெய்தால் ஒதுங்கும் அல்லது பதுங்கும் ஆனால் இந்த ஆமைக்கு உடம்பே கூடு, கூடே உடம்பு. ஆமை (Turtle) ஊர்வன வகையை சேர்ந்தது. நிலத்திலும், நீரிலும் வாழக்கூடிய ஒரு இரு வாழ்வி. நிலைத்தில் வாழக்கூடிய ஆமைக்கு நீளமான கால் நகங்கள் இருக்கும்.

ஆமை (Turtle) தரையில் நடக்கக் கூடிய வேகம் மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர். கடலில் வாழக்கூடிய ஆமைகளுக்கு கால்களே துடுப்பு போன்று அமைந்திருக்கும். ஆமையினுடைய உடல் ஓட்டினால் மூடப்பட்டிருக்கும்.  இது அனைவரும் அறிந்தது தான்.  இந்த ஓடுதான் ஆமைக்கு பக்கபலம். இந்த ஓட்டில் பல நரம்புகள் இருக்கிறது அதனால் இந்த ஓடுகளை வைத்துதான் அது உணர்திறனை பெற்றுள்ளது. உலகில் ஏறத்தாழ 300 வகையான ஆமை இனங்கள் இருக்கின்றன. இவற்றில் சில இனங்கள் அழிவு நிலையில் இருக்கின்றன.

கடல் ஆமைகள் (Turtle) ஒப்பீட்டளவில் பெரியவை. தோல்முதுகு கடல் ஆமை என்றொரு ஆமை இனம்  தொள்ளாயிரம் கிலோகிராம் எடை வரைக்கும் வளரக்கூடியதாம். பொதுவாக உயிரினங்களில் ஆமைகளுக்கு நீண்ட ஆயுள் உள்ளது. அதனுடைய இதயம் மிகவும் நிதானமாக துடிப்பதே அதனுடைய  நீண்ட ஆயுளுக்கு காரணம். அப்படிப்பட்ட ஆமைகளின்  ஆயுட்காலம் 150 வருடங்கள்.

ஆமை (Turtle) முட்டை இட்டு குஞ்சு பொரிக்கக் கூடிய இனத்தை சார்ந்தது. ஆனால் ஆமைகள் அடைகாத்து குஞ்சி பொரிக்காது. ஆமைக்குஞ்சுகள் தானாகவே முட்டையில் இருந்து வெளியே வந்து கடலை நோக்கி செல்லும். ஒவ்வொரு கடல் ஆமையும் 100 ல் இருந்து 200 எண்ணிக்கையிலான முட்டைகளை ஒரே சமயத்தில் இடக்கூடியது. அந்த முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளியே வர கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆகும். வெளிவந்த ஆமை குஞ்சுகள் 48 மணி நேரம் தொடர்ந்து நீந்தகூடியது.

ஆண் ஆமைகளுக்கு முன்கால் நகம் நீளமாகவும், நீளமான வாலும் இருக்கும். கடல் வாழ் ஆமைகளில் ஆறு வகையான இனங்கள் மிகவும் பிரசித்திப் பெற்றது. மிகச்சிறிய ஆமையாக கருதக்கூடிய ஸ்டிங்காட் 110 மில்லி மீட்டர் கொண்டது. இவ்வகையான ஆமைகள் (Turtles) வடகிழக்கு அமெரிக்காவில் இருக்கிறது. மற்ற 5 வகை ஆமை இனங்கள் இந்திய கடற்பகுதியில் வாழ்கிறது. அதுதான் பேராமை, சித்தாமை, அலுங்காமை, தோணி ஆமை, பெருந்தலை ஆமை.

கடல் வாழ் ஆமைகளில் ஆறு வகையான இனங்கள் மிகவும் பிரசித்திப் பெற்றது. மிகச்சிறிய ஆமையாக கருதக்கூடிய ஸ்டிங்காட் 110 மில்லி மீட்டர் கொண்டது. இவ்வகையான ஆமைகள் (Turtles) வடகிழக்கு அமெரிக்காவில் இருக்கிறது. மற்ற 5 வகை ஆமை இனங்கள் இந்திய கடற்பகுதியில் வாழ்கிறது. அதுதான் பேராமை, சித்தாமை, அழுங்காமை, தோணி ஆமை, பெருந்தலை ஆமை. இதில் பெருந்தலை ஆமையை தவிர மற்ற வகை ஆமைகள் மட்டுமே இந்திய கடற்கரை பகுதிகளில் முட்டையிடும்.

நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான கால கட்டங்களில்தான் ஆமைகள் முட்டை இட ஏற்ற காலம் ஆகும். இதில் சித்தாமைகள் தான் அதிக அளவில் முட்டை இடக்கூடியவை. ஒடிசாவின் ஆற்று முகத்துவாரத்தில் இவ்வகையான ஆமைகள் (Turtles) அதிகமாக முட்டையிடுகிறது. இதற்காக ஆறு லட்சம் எண்ணிக்கையிலான சித்தாமைகள் தமிழகம் மற்றும் ஆந்திர கடற்கரை பகுதிகளை வந்தடைகிறது. பயணத்தின் வழியிலும் முட்டை இடக்கூடிய பழக்கம் கடல் ஆமைகளுக்கு உண்டு.

ஆமையின் வாயிலும், கழிவு பகுதியிலும் சிறப்பு மிக்க இரத்தநாளங்கள் அமைந்திருக்கிறது. இது அவை நீரில் மூழ்கி இருக்கும்போது பிராணவாயுவை நீரில் இருந்து பிரித்தெடுத்து சுவாசிக்க உதவுகிறது. இதில் பேராமையானது 450 கிலோ கிராம்வரை எடை இருக்கும். இந்த ஆமைகளின் உணவுகள். ஆமை (Turtle) இனங்களில் சில ஆழமான கடலில் கடற்பாசிகளை, கற்பஞ்சுகளை உணவாக உட்கொள்ளும்,  பெருந்தலை ஆமைகள் நண்டு மற்றும் மெல்லுடலிகளை உட்கொள்ளும், மேலும் சில வகை ஆமைகள் ஜெல்லி போன்ற மீன்களை உணவாக உட்கொள்ளும். ஆமைகளில் பல டன் வரை எடை கொண்ட ஆமைகள் இருந்தாலும் அவை இயற்கையாகவே சாதுவான பிராணி.

வளர்ப்பு ஆமைகள் (Turtle Pet):

டர்டில் (Turtle) என்று சொல்லக்கூடிய ஆமைகள் பிரபலமாகி வருகிறது. இவ்வகையான ஆமைகள் வளர்ப்பு ஆமைகளாக (Turtle Pet) கடைகளில் விற்கப்படுகிறது. இதில் இரண்டு வகைகள் இருக்கிறது. ஒன்று ரெட் இயர்ட் டர்டில் (Red Eared Turtle Pet), மற்றொன்று (Green Turtle Pet). இந்த வகையான ஆமைகள் முட்டை கோஸ், கேரெட், பீன்ஸ், கோழி கறி (Chicken), உயிர் மீன் (Live Fish) போன்றவைகளை உணவாக உட்கொள்ளும். டர்டிலை (Turtle Pet) விற்கும் கடைகளிலும் இதற்கான உணவாக டர்டில் பெல்லட் (Turtle Pellet) என்னும் உணவு விற்கப்படுகிறது. இதற்கு தேவையான எல்லா சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது. இது மட்டும் இன்றி வீட்டில் வளர்க்கப்படும் ஆமைகளை பராமரிக்க அதற்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு இருக்கிறது. இந்த ஆமைகளை வளர்க்கும் போது அவை தண்ணீர் மற்றும் தரையில் இருப்பது போன்ற அமைப்புகளில் வளர்க்க வேண்டும். இந்த ஆமைகள் இந்தியாவில் 700 ரூபாய் முதல் 2000 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுகிறது. அதிஷ்டத்திற்காகவும் சிலர் ஆமைகளை செல்ல பிராணியாக தங்களின் வீடுகளில் வளர்க்கின்றனர்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top