Gistak Media – Cinema News | Trending News | Latest News

TVK Election Symbol : தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) ஆனது தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய்யின் “தமிழக வெற்றி கழகம்” (TVK)-க்கு தேர்தல் சின்னமாக “விசில் (Whistle)” என்று (TVK Election Symbol) அதிகாரப்பூர்வமாக ஜனவரி 22,  2026 அன்று அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

இந்த 2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஆனது ஒரு யுத்தமான அரசியல் சூழலை உருவாக்கி வருகிறது. இந்த தேர்தல் ஆனது தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதாக திகழும் என்று பல அரசியல் ஆராய்ச்சியாளர்கள்  கருதுகின்றனர். பெரிய வகையில் நேரடியாகவே நடிகர்கள் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்கள். முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக, CPM, BJP உட்பட பல கட்சிகள் தனித்தனி மற்றும் கூட்டணி யோசனைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஒரு புதிய மாற்றம், புதிய அத்தியாயம் மற்றும் ஒரு பெரிய எழுச்சி ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

TVK கட்சியின் தோற்றம்

பிரபல நடிகர் விஜய் 2024-25-ல் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் இயக்கத்தை நிறுவினார். இந்த இயக்கம் ஆனது தமிழ் மக்களின் உருவாக்குதல், சமூக நீதி, பொருளாதார முன்னேற்றம் போன்ற முக்கிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்த இயக்கம் ஆனது தமிழக மக்கள் மற்றும் நடிகர் – நடிகைளிடையே பெரும் ரசிகர் ஆதரவுவைப் பெற்றுள்ள இயக்கம் ஆகும்.  தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இந்த “தமிழக வெற்றி கழகம்” (TVK) போட்டியிட உள்ளது.

தேர்தல் சின்னம் (Election Symbol) என்பது ஒரு ஓட்டு அடையாளம்

தேர்தலில் ஈடுபடும் கட்சிகளுக்கும் மற்றும் வேட்பாளர்களுக்கும் தேர்தல் சின்னம் ஆனது ஒரு சிறந்த அடையாள அங்கீகாரத்தை வழங்கும். இது கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தில் (TVK Election Symbol) முக்கிய பங்கு வகிக்கும். மேலும் எழுத தெரியாத  மற்றும் குறைந்த கல்வி நிலையில் உள்ள வாக்காளர்களுக்கு சிறந்த அடையாளத்தை வழங்க இது  பயன்படும்.

TVK Election Symbol - Gistakmedia

TVK கட்சியின் முதல் வெற்றி - “விசில்” சின்னம் (TVK Election Symbol)

TVK கட்சி ஆனது இந்திய தேர்தல் ஆணையத்திடம் 10 சின்னங்களை (அதாவது Whistle, Cricket Bat, Auto-rickshaw, உட்பட) தேர்தல் சின்னமாக பரிந்துரைத்திருந்தது. அந்த பரிந்துரைக்கப்பட்ட  10 சின்னங்களில் இருந்துதான் இந்திய தேர்தல் ஆணையம் TVK கட்சிக்கு  “விசில்” சின்னத்தை தேர்ந்தெடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (TVK Election Symbol) ஆனது ஜனவரி 22,  2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஆணையத்தின் விசில்” சின்ன அதிகாரப்பூர்வ அறிவிப்பானது மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த “விசில்” சின்ன அறிவிப்பானது TVK கட்சியின் முதல் வெற்றியாக கொண்டாடப்படுகிறது.

TVK கட்சியின் தலைவர் விஜய் தேர்தல் பணிகளை துவக்கி விட்டார்

தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்ட TVK கட்சியின் தலைவர் விஜய் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளார். தலைவர் விஜய் அவர்கள் விரைவில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் புதிய ஜனநாயக மாற்றத்திற்கான ஒரு அறிகுறி

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானது என்றும், இது புதிய ஜனநாயக மாற்றத்திற்கான அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. பெரிய வகையில் நேரடியாகவே நடிகர்கள் அரசியல் களத்தில் இறங்கியுள்ளதால் இது  தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெரிய மாற்றத்தை (TVK Election Symbol) ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமானதாக திகழும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top