UCO Bank Recruitment : யூகோ வங்கியில் 536 பயிற்சி பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..!
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. யூகோ வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection) நடத்தும் வங்கிகளுக்கான தேர்வு வழியாக நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது 536 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப (UCO Bank Recruitment) அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
UCO Bank Recruitment
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
யூகோ வங்கியில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கு வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) மொத்தம் 536 பணியிடங்கள் அறிவித்துள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
யூகோ வங்கியில் காலியாக உள்ள இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு 1.04.2021-க்கு பிறகு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஐபிபிஎஸ் தெரிவித்துள்ளது.
3.வயது தகுதி (Age)
இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு வயது வரம்பை பொறுத்தவரை 1.10.2025 தேதிப்படி 20 வயது முதல் 28 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், மத்திய அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
4.சம்பளம் (Salary)
யூகோ வங்கியில் காலியாக உள்ள இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு 2 வருட காலம் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.15,000/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
யூகோ வங்கியில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு ஆன்லைன் நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு (Interview) அடிப்படையில் தகுதியான பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என வங்கி பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
6.விண்ணப்பக் கட்டணம் (Application Fees)
யூகோ வங்கியில் இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.800 செலுத்த வேண்டும். மேலும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
7.விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
யூகோ வங்கியில் இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.uco.bank.in/ என்ற இணையதளத்தில் வரும் 30.10.2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து உறுதி செய்து கொள்ளவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!