UIIC Assistant Recruitment 2024 : 250 நிர்வாக அலுவலர் பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் United India Insurance Company (UIIC)-ல் நிர்வாக அலுவலர் (Administrative Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான (UIIC Assistant Recruitment 2024) அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 250 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
UIIC Assistant Recruitment 2024 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : United India Insurance Company (UIIC)-ல் காலியாக உள்ள நிர்வாக அலுவலர் (Administrative Officer) பணியிடங்களை நிரப்புவதற்கு 250 காலிப்பணியிடங்கள் (UIIC Assistant Recruitment 2024) அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த நிர்வாக அலுவலர் பதவிக்கு (UIIC Assistant Recruitment 2024) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை (UG) முடித்திருக்க வேண்டும். மேலும் பணி வழங்கப்படும் மாநிலத்தின் வட்டார மொழி தெரிந்திருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 31.12.2023 அன்று 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அலுவலர் (Administrative Officer) பதவிக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளம் ரூ.88,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- கணினி வழித் தேர்வு : கணினி வழித் தேர்வானது கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் கணிதம், திறனறிதல், ஆங்கிலம், கணினி மற்றும் பொது அறிவு அல்லது காப்பீடு தொடர்பான கேள்விகள் (Insurance And Financial Marketing Awareness) என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்விற்கான கால அளவானது 2 மணி நேரம் ஆகும்.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://ibpsonline.ibps.in/uiicloct23/ என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு (UIIC Assistant Recruitment 2024) ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 23.01.2024 ஆகும்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : பொதுப் பிரிவு OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.1000/- ஆகவும் SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.250/- ஆகவும் விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மேலும் விவரங்களுக்கு : https://uiic.co.in/sites/default/files/uploads/recruitment/Recruitment%20of%20AO%20Scale%20I.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!