2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 01.02.2026 அன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் ஆனது நிதியமைச்சர் (Union Budget 2026) நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படும் 9வது பட்ஜெட் ஆகும். இந்தியாவின் வரலாற்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் பட்ஜெட் தாக்கல் நிகழ்வு மற்றும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
இந்த பட்ஜெட் ஆனது இந்தியா ‘வளர்ச்சியடைந்த இந்தியா 2047’ (Viksit Bharat 2047) என்ற இலக்கை நோக்கி நகர்வதில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் என்று அரசு கூறியுள்ளது. இந்த 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அரசு ஆனது உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பசுமை ஆற்றலுக்கு நல்ல சலுகைகளை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் பங்குச் சந்தை தொடர்பான முதலீடுகள் மற்றும் சில செயல்பாடுகளின் விலையை அரசு உயர்த்தியுள்ளது.
நிதிசார் விவேகத்துடன் நிலைத்தன்மையை பேணும் பட்ஜெட்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஆனது நிதிசார் விவேகத்துடன் நிலைத்தன்மையை பேணும் பட்ஜெட் என்று அறிவித்துள்ளார். தான் 12 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய நிதியமைச்சராக பதவியேற்றது முதல் ஒரு ஸ்திரத்தன்மை, நிதி ஒழுக்கம், நீடித்த வளர்ச்சி, மிதமான பணவீக்கம் ஆகியவற்றைக் கொண்ட நாடாக இந்திய நாட்டின் பொருளாதாரப் பாதையை வகைப்படுத்தி வருவதாக கூறியுள்ளார். நிச்சயமற்ற மற்றும் கொரோனா போன்ற இடையூறான காலங்களில்கூட விவேகமான முடிவுகள் எடுக்கப்பட்டு பொருளாதார முன்னேற்றப் பாதையில் வழிநடத்தப்பட்டு வருவதாகவும் (Union Budget 2026) கூறியுள்ளார். சிறப்பான முறையில் உள்நாட்டு உற்பத்தித் திறனை வளர்த்துள்ளதாகவும், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும், குறிப்பாக இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது தொலைநோக்குடைய கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டு பொது முதலீட்டில் வலுவான கவனத்தை செலுத்தி, தற்சார்பை தூணாகக் கொண்டு, நிதிசார் விவேகத்துடன் நிலைத்தன்மையை பேணும் பட்ஜெட்டை அறிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்த பட்ஜெட்டில் பட்டியலிடப்பட்டுள்ள வரி விதிப்பு மற்றும் சலுகைகளின் காரணமாக (Union Budget 2026)
விலை குறையும் பொருட்கள்
- 17 புற்றுநோய் மருந்துகள்
- 7 உயிர்காக்கும் மருந்துகள்
- நீரிழிவு தொடர்பான மருந்துகள்
- மின்சார வாகன பேட்டரிகள்
- சோலார் பேனல்கள்
- லித்தியம் பேட்டரி பாகங்கள்
- மைக்ரோவேவ் ஓவன்கள்
- ஸ்மார்ட் போன்கள்
- தோல் உபகரணங்கள்
- விளையாட்டு உபகரணங்கள்
- சிவிலியன் பயிற்சி விமான பாகங்கள்
- வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கான செலவுகள்
- வெளிநாட்டு கல்விக்கான செலவுகள்
- மதுபான கழிவுகள்
- காலணி பாகங்கள் ஏற்றுமதி
- தோல் ஏற்றுமதி
விலை அதிகமாகும் பொருட்கள்
- சிகரெட்
- பான் மசாலா
- பீடி
- குட்கா
- இரும்பு, நிலக்கரி, உப்பு போன்ற கனிமங்கள்
இந்த பட்ஜெட்டின் சிறப்பான திட்டங்கள்
“மகாத்மா காந்தி ஸ்வராஜ் திட்டம்”
ஜவுளி துறையில் முன்னேற்றம் காண “மகாத்மா காந்தி ஸ்வராஜ் திட்டம்” என்ற பெயரில் நான்கு மெகா ஜவுளி பூங்காக்களை அமைக்க உள்ளதாகவும் மற்றும் ஜவுளி துறைக்கு ஆதரவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட் அறிக்கை தெரிவிக்கிறது.
மக்கள் நலம் பேணுதல்
இந்திய மக்களின் நலம் கருதி புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் 17 மருந்துகளுக்கான அடிப்படை சுங்க வரியை அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் இந்த மருந்துகள் மலிவான விலையில் கிடைக்கும். இது தவிர, 7 அரிய வகை நோய்கள் பட்டியலிடப்பட்டு அவைகளின் சிகிச்சைக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் (Union Budget 2026) மருந்துகள் மீதான வரியை அரசு நீக்கியுள்ளது.
வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கான முதலீட்டு வரம்பு உயர்வு
வெளிநாட்டில் வாழ்கின்ற இந்தியர்களின் இந்திய முதலீடுகளை ஊக்குவிக்கும் விதத்தில் முதலீட்டு வரம்பானது 5% முதல் 10% வரை உயர்த்தப்படுவதாக இந்த பட்ஜெட் அறிக்கை தெரிவிக்கிறது.
பெண்கள் முன்னேற்றம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் முன்னேற்றம் கருதி ஒரு பெண்கள் விடுதி கட்டப்படும்.
பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, சமூக துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
- எல்லைப் பாதுகாப்பு, இராணுவ Modernisation, “Make in India” மூலம் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி போன்றவற்றை வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டை விட பாதுகாப்புத் துறைக்கு இந்த ஆண்டு கூடுதலாக நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வி, சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு, நகர்ப்புற உள்கட்டமைப்பு, களப்பணிகள் (MGNREGA போன்ற திட்டங்கள்) ஆகியவற்றிலும் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
- சிறப்பான உள்கட்டமைப்பு அறிவிப்புகள்,
- சென்னை – பெங்களூரு மற்றும் சென்னை – ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- ஒடிசா தால்சர் முதல் தமிழக ஆம்பூர் வரை உள்நாட்டு நீர்வழி பாதை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
MSME-க்கு மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு
- சிறு, குறு தொழில்களின் முன்னேற்றம் கருதி (அனைத்து மாநிலங்களுக்கும்) ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழகம், ஆந்திரா, ஒடிசா, மற்றும் கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களில் அரிய கனிமங்கள் (Critical Minerals) வெட்டெடுப்பு வழித்தடங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மாநிலங்களுடன் இணைந்து பிரதேச கெமிக்கல் பூங்காங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனிநபர் வருமான வரி விகிதங்கள் மற்றும் வரம்புகள்
தனிநபர் வருமான வரி விகிதங்களிலும் மற்றும் வரம்புகளிலும் இந்த பட்ஜெட் ஆனது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
நல்ல ஊக்கத்தை தரும் பட்ஜெட்
நல்ல நாட்டு வளர்ச்சி மற்றும் சிறப்பான வேலைவாய்ப்பு என ஏங்கும் மக்களுக்கு இந்த மாதிரியான கட்டமைப்பு – முன்னோக்கிய (Forward-Looking) பட்ஜெட் ஆனது நல்ல ஊக்கத்தை தரும்.