Upcoming Tamil Movies In February 2024 : பிப்ரவரி மாதம் வெளியாகும் திரைப்படங்கள்
பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியலை (Upcoming Tamil Movies In February 2024) காணலாம். சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சேப்டர் 1, மெர்ரி கிறிஸ்துமஸ், ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன், தூக்குத்தூரை என பல படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 2024 வெளியாகும் திரைப்படங்களின் விவரங்களைப் (Upcoming Tamil Movies In February 2024) பார்க்கலாம்.
Upcoming Tamil Movies In February 2024 :
மறக்குமா நெஞ்சம்
ராகோ யோகேந்திரன் இயக்கத்தில் ரக்ஷன், மலினா, தீனா மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்குப்பட்டி ராமசாமி
‘வடக்குப்பட்டி ராமசாமி’ கார்த்திக் யோகி இயக்கிய ஒரு நாடக தமிழ் திரைப்பமாகும். இந்த படத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் தயாரித்துள்ளார். வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் 02 பிப்ரவரி 2024 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சிக்லெட்ஸ்
எம்.முத்து இயக்கத்தில், இன்றைய இளைஞர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இடையே உள்ள தலைமுறை இடைவெளியை அடிப்படையாகக் கொண்ட இப்படம் சிக்லெட்ஸ், இப்படத்தில் சாத்விக் வர்மா, ரஹீம், ஜாக் ராபின்சன், அமிர்தா ஹல்தார், நயன் கரிஷ்மா மற்றும் பலர் நடித்துள்ளனர், மேலும் இப்படம் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.
லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பாட்டம்
பாம்பாட்டம் வடிவுடையான் இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஜீவன், மல்லிகா ஷெராவத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இந்த பாம்பாட்டம் திரைப்படம் 16 பிப்ரவரி 2024 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தி பாய்ஸ்
தி பாய்ஸ் திரைப்படம் சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார் இயக்கிய அடல்ட் தமிழ் திரைப்படம். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியாக உள்ளது.
சைரன்
ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!