மத்திய ஆயுதப்படைகள் (Central Armed Police Forces – UPSC CAPF) இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பில் முக்கிய தளமாக விளங்குகின்றன. தற்போது மத்திய ஆயுதப்படையில் 349 கமாண்டண்ட் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகி உள்ளது.
பணி சம்பத்தப்பட்ட விவரங்கள்
- பதவியின் பெயர் – உதவி கமாண்டண்ட் (Assistant Commandants)
- மொத்த காலியிடங்கள்- 349
- பணியிட குறிப்புகள்
- எல்லை பாதுகாப்பு படை (BSF) – 108
- மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF) – 106
- மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (CISF) – 70
- இந்தோ திபெத்திய எல்லை காவல் (ITBP) – 12
- சஷாஸ்த்ர சீமா பல் (SSB) – 53
- தேர்வு நடை பெற உள்ள தேதி – 19.07.2026
இந்த பணிக்கு எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் சரியான முறையில் நடத்தப்படும்.
மாத மொத்த வருமான குறிப்புகள் (UPSC CAPF)
ஆரம்ப மாத மொத்த வருமானம் ஆனது Rs. 70,000 – Rs. 90,000/- வரை இருக்கலாம். (ஆரம்ப ஊதியமான ரூ. 56,100/ – 1,77,500/- (Level 10) உடன் DA, HRA போன்ற சலுகைகள் எல்லாம் சேர்த்து ஆரம்ப மாத மொத்த வருமானம் ரூ.70,000 முதல் Rs. 90,000/- வரை பெற வாய்ப்புகள் உள்ளது).
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்று பட்டம் முடித்திருக்க வேண்டும். தற்போது 2026-ம் ஆண்டில் தகுதிப் பெறுவர்களும் விண்ணப்பம் (UPSC CAPF) செய்யலாம். அதாவது இறுதி ஆண்டு மாணவர்கள் தற்காலிகமாக விண்ணப்பிக்கலாம். ஆனால் தேர்வு நேரத்தில் அந்த மாணவர்கள் தேர்வு பெற்ற சான்றிதழை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு தகுதிகள்
- 20-25 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.
- எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 வருடங்கள் தளர்வு உண்டு.
- ஒபிசி பிரிவினர்களுக்கு 3 வருடங்கள் வயது தளர்வு உண்டு.
- சரியான உடற்தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் சரியான முறையில் நடத்தப்படும்.
விண்ணப்ப கட்டண குறிப்புகள்
விண்ணப்பதாரர்கள் ரூ.200/- கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மற்றும் பெண் விண்ணப்பதார்களுக்கு கட்டண தளர்வு உண்டு.
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க தொடக்க தேதி – 20.02.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி – 12.03.2026
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ UPSC இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.