Urjit Patel Appointed As IMF Executive Director : சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக உர்ஜித் படேல் நியமனம்
ஆர்பிஐ-யின் முன்னாள் ஆளுநர் டாக்டர் உர்ஜித் படேல், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக 3 ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் அமைச்சகம் (Urjit Patel Appointed As IMF Executive Director) தெரிவித்துள்ளது. மேலும் அவர் அமெரிக்காவில் வாஷிங்டனில் அமைந்துள்ள உலகளாவிய நிதி நிறுவனத்தில் பூட்டான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் இணைந்து இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேக்ரோ பொருளாதாரம் மற்றும் பணவியல் கொள்கை நிபுணத்துவத்திற்காக உர்ஜித் படேல் போற்றப்படுகிறார். உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிகரிக்கும் கடன் பாதிப்புகள் மற்றும் வர்த்தக இயக்கவியல் போன்றவை முற்றிலும் மாறிவரும் நிலையில், டாக்டர் உர்ஜித் படேலின் நியமனம் பெரிய மாற்றத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் B.Sc, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் M.Phil., மற்றும் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் Ph.D. ஆகியவற்றை முடித்துள்ள டாக்டர் உர்ஜித் படேல் 1990களில் சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் சார்பில் பணியாற்றியுள்ளார். மேலும் அவர் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (Asian Infrastructure Investment Bank) துணைத் தலைவராகவும், புரூக்கிங்ஸ் நிறுவனத்தில் மூத்த உறுப்பினராகவும், தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் தலைவராகவும், பணியாற்றியுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் 24 வது ஆளுநர்
ஆர்பிஐ-யின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனுக்குப் பிறகு, 2016, செப்டம்பர் 4-ல் உர்ஜித் படேல், ரிசர்வ் வங்கியின் 24 வது ஆளுநராக பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலத்தில் பணவீக்கத்தை இலக்காகக் கொண்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்தும் விதமாக 2016 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து அவருக்கும் மத்திய அரசுக்கும் சில பிரச்சனைகள் இருந்தபோதும், அவரின் தனிப்பட்ட காரணங்களால் அவர், டிசம்பர் 10, 2018 இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகினார்.
சர்வதேச நாணய நிதியம் (Urjit Patel Appointed As IMF Executive Director)
ஒரு நாட்டில் நிதிப் பற்றாக்குறையால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள, சர்வதேச நாணய நிதியம் (IMF) கடன் வழங்கும் அமைப்பாக விளங்கி வருகிறது. மேலும் இது உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதுமட்டுமல்லாமல் இந்த அமைப்பானது தன்னுடைய உறுப்பு நாடுகளுக்கு தேவைப்படும்போது, தொழில்நுட்ப உதவி வழங்குகிறது. மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 நிர்வாக இயக்குநர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!