Using AI Mode To Find Missed Child : AI முறையில் காணாமல் போன பெண் குழந்தையை கண்டுபிடிக்க முயற்சி
Police Dept Trying To Find The Missing Girl Child In AI Mode :
தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் AI-ஐ (செயற்கை நுண்ணறிவை) பயன்படுத்தி 13 வருடத்திற்கு முன்பாக காணாமல் போன இரண்டு வயது பெண் குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் (Using AI Mode To Find Missed Child) தீவிரமாக இறங்கி உள்ளது. கணேஷ் – வசந்தி என்ற தம்பதியினரின் இரண்டு வயது பெண் குழந்தையான கவிதா கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை. காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க அவரது தந்தை தொடர்ந்து போராடி வருகிறார். இந்த பாசப் போராட்டம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. காணாமல் போன குழந்தையின் தந்தை வங்கி அதிகாரி கணேசன் (50) சென்னை சாலிகிராமத்தில் உள்ள மஜித் நகர் வலம்புரி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆவார். இவரது 2 வயது குழந்தை கவிதா கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந்தேதி வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் தாய் சமையல் அறையில் சமைத்து கொண்டிருந்தார். இவர்களது வீட்டு மாடியில் உறவினர் குடியிருந்தனர். வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வீட்டு மாடியில் உறவினர் வீட்டில் இருக்கும் என்று தாய் நினைத்தார்.
சிறிது நேரத்திற்கு பின் குழந்தையை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தை மாயமானதைக் கண்டு திடுக்கிட்ட பெற்றோர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குழந்தையை ‘காணவில்லை’ என்ற பிரிவின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இந்த வழக்கை அப்போது சென்னை காவல் ஆணையராக இருந்த திரிபாதி துரிதப்படுத்தி தனிப்படைகளை அமைத்து தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கு விவகாரம் பின்னர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் துப்பு துலக்கியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து போலீசார் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை என நீதிமன்றத்தில் வழக்கை முடித்து வைத்தனர்.
Using AI Mode To Find Missed Child - நவீன AI முறையில் நூதன முயற்சி :
எப்படியும் குழந்தையை கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் தந்தை கணேசன் காவல் துறையின் கதவுகளை தொடர்ந்து தட்டி வந்தார். இந்நிலையில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் குழந்தை மாயமான வழக்கு விவகாரத்தை கையிலெடுத்துள்ளனர். 13 ஆண்டுகள் கடந்து தற்போதுள்ள AI தொழில்நுட்ப வசதி மூலம் (Using AI Mode To Find Missed Child) 2 வயதில் மாயமான குழந்தை புகைப்படத்தை பயன்படுத்தி தற்போது 14 வயதில் அந்தக் குழந்தை எப்படி இருக்கும் என்ற தோற்றம் ஆனது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் குழந்தையின் பழைய புகைப்படம், மற்றும் AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய புகைப்படம் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து போஸ்டராக வெளியிட்டுள்ளனர். மேலும் போலீசார் அந்த போஸ்டரில் மாயமான குழந்தை பற்றி தகவல் தெரிந்தால் 9444415815, 9498179171 என்ற செல்போன் எண்களை தொடர்புக் கொள்ளலாம் என்றும், சரியான தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மக்கள் அனைவரது கண்களில் இருந்தும் இந்த பாசப்போராட்டம் ஆனது கண்ணீரை வரவழைத்துள்ளது.
Latest Slideshows
-
Candidates Chess 2026 : கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.. மகளிர் பிரிவில் பட்டம் வென்றார் வைஷாலி.!
-
Sambadi Aattam Book Review : மாரி செல்வராஜ் எழுதிய 'சம்படி ஆட்டம்' புத்தக விமர்சனம்.!
-
IPL 2026 CSK vs KKR : சென்னை அணியின் வெற்றி தொடருமா? கொல்கத்தாவுடன் இன்று மோதல்!
-
Vivo T5 Pro 5G : பட்ஜெட் விலையில் 'விவோ டி5 ப்ரோ 5ஜி' நாளை அறிமுகம்....
-
Indian Bank SO Recruitment 2026 : இந்தியன் வங்கியில் 350 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?
-
Tamil New Year 2026 : புதிய நம்பிக்கையுடன் மலரும் 'தமிழ்ப் புத்தாண்டு' சிறப்புகள் & வழிபாட்டு முறைகள்!
-
Sabja Seeds Benefits in Tamil : கோடைக்காலத்தில் குளிர்ச்சி தரும் 'சப்ஜா விதைகள்'.. இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
-
CSK vs DC IPL 2026 Highlights : சஞ்சு சாம்சன் மிரட்டல் சதம்.. டெல்லியை வீழ்த்தி சென்னை அணி முதல் வெற்றி
-
Jananayagan Movie Leaked Online : இணையத்தில் கசிந்த ‘ஜனநாயகன்’.. விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி?
-
LIK Movie Review : எப்படி இருக்கிறது LIK.. நான்காவது முறையாக ஹிட் அடித்தாரா பிரதீப்?