உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா என்ற பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நிலச்சரிவில் கடந்த மாதம் 12ம் தேதி சிக்கிய 41 தொழிலாளர்கள் இன்னும் மீட்கப்படவில்லை. சுரங்க நிபுணர்கள், தீயணபை்பு வீரர்கள் வரவழகை்கப்பட்டு இவர்களை மீட்பதற்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 41 தொழிலாளர்களுக்கும் தேவையான உணவு, குடிநீர், ஆக்ஸிஜன் உள்ளிட்டவை குழாய்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
தற்போது மீட்புப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்காவில் இருந்து நவீன துளையிடும் இயந்திரம் ஆனது கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சிறந்த நிபுணர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். சுரங்க மீட்பு பணிகளில் மிகவும் கைதேர்ந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த அர்னால்ட் டிக்ஸ் முக்கிய ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். சாதாரண உணவுகளை சாப்பிட்டு வந்தால் இயற்கை உபாதைகளை கழிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்பதால், விண்வெளி வீரர்களுக்கு அளிக்கப்படும் உணவு முறைகளே பின்பற்றப்பட்டு வரப்படுகிறது. அந்த தொழிலாளர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் லூடோ, ரம்மி, செஸ் அட்டைகளை குழாய் வழியாக அனுப்பியுள்ளனர். சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக உத்தர்காசியில் 41 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை ஆனது அமைக்கப்பட்டுள்ளது. தயார் நிலையில் 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Uttarakhand Tunnel Rescue Mission - சுரங்கத் தொழிலாளர்கள் மீட்புப் பணியில் காலதாமதம் :
Uttarakhand Tunnel Rescue Mission : சுரங்கத்தில் 57 மீட்டர் தூரத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை எளிதாக மீட்டுவிடலாம் என முதலில் அதிகாரிகள் நினைத்தனர். அந்த இடம் நிலச்சரிவுக்கு ஏற்ற வகையில் உள்ளதால் அதிர்வுகளால் மேலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகர் இயந்திரத்தை கொண்டு மீட்புக் குழுவினர் கிடைமட்டமாக துளையிட்டு உள்ளே நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில் ஆகர் இயந்திரம் பொருத்தப்பட்ட கான்கிரீட் தளம் திடீரென சேதமடைந்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. சுரங்க இடிபாடுகளில் அதிக அளவு இரும்பு கம்பிகள் இருப்பதால் ஆகர் இயந்திரம் துளையிடும்போது இரும்பு ராடு குறுக்கிடுகிறது.
அதோடு சுரங்கத்தின் மேல்புறத்தில் இருந்து செங்குத்தாக துளை போட்டு மீட்கும் பணியும் சவால் நிறைந்த ஒன்றாக உள்ளது. மேலும் அங்குள்ள சீதோஷ்ண நிலையும் மீட்பு பணியை (Uttarakhand Tunnel Rescue Mission) தாமதப்படுகின்றது. மீட்புப் பணியில் ஒவ்வொரு நகர்வும் கடும் சவாலாக மாறியதால் பணிகளை மேற்கொள்ள அமெரிக்காவில் இருந்து நவீன துளையிடும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து சிறந்த நிபுணர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். தற்போது கிடை மட்டமாக மற்றும் மேல் பக்கமாக 2 துளையிட்டு அது வழியாக ட்யூப் போட்டு அதன் மூலமாக ஊழியர்களை வெளியே கொண்டு வர முடிவு செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுரங்கப்பாதை மீட்புப் பணியின் முக்கிய ஆலோசகராக அர்னால்டு டிக்ஸ் :
இவர் பிரிட்டனில் பள்ளி கல்வியை முடித்து ஆஸ்திரேலியாவில் புவியியல் என்ஜீனியரிங் கல்வி பயின்றவர். இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுரங்க கட்டுமான தொழிலில் எக்ஸ்பர்ட்டாக திகழ்கிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு சுரங்கப் பாதை திட்டங்களுக்கு அவர் ஆலோசகராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர் இந்தியாவில் டெல்லி மெட்ரோ சுரங்க பாதைக்கும் இவர் ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
மீட்புப் பணியில் தமிழ்நாட்டு நிறுவனங்களின் பெரும் பங்களிப்பு :
திருச்செங்கோட்டை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள்தான் சுரங்க ஊழியர்களுக்கு ஆக்சிஜன் தொடங்கி உணவு வரை எல்லாம் கொடுக்க காரணமாக உள்ளன. பரந்தாமன் ராக் டிரில்லர் என்ற திருச்செங்கோடு நிறுவனம் உருவாக்கிய ரிக் தொழில் நுட்பத்துடன் கூடிய கருவியை ‘தரணி ஜியோ டெக்’ நிறுவனம் பயன்படுத்தி வந்துள்ளது. இந்த திருச்செங்கோடு நிறுவன ஊழியர்கள்தான் சுரங்கத்திற்குள் ஆக்சிஜன் தொடங்கி உணவு வரை எல்லாம் செல்ல காரணம் ஆவர்.
திருச்செங்கோடு நிறுவனங்கள் முதல் இரண்டு இடங்களில் போடப்பட்ட துளைகள் சரியாக பயன் அளிக்கவில்லை என்பதால் மூன்றாவது முறையாக முயன்று துளை போட்டுள்ளனர். அதன்பின் அந்த எண்டோஸ்கோபி கேமரா அனுப்பப்பட்டு உணவும் வழங்கப்பட்டு வருகிறது.