Uyegp Scheme : தமிழக அரசு தொழில் துவங்க மானியத்துடன் கடன் உதவி திட்டம் செயல்படுத்தி உள்ளது
Uyegp Scheme - தமிழக அரசு ஆனது மானியத்துடன் கடன் தருகிறது - ரூ.3.75 லட்சத்தை கட்டத் தேவையில்லை :
வேலைவாய்ப்பற்ற இளைஞளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் மற்றும் தொழில் துவங்கவும் தமிழக அரசின் சார்பில் கடன் (Uyegp Scheme) வழங்கப்படுகிறது. வங்கிகள் மூலமாக வழங்கப்படும் 15 இலட்சம் வரையினாலான கடன் உதவிக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமானியம் ரூ.3.75 இலட்சத்தை மானியமாக பெற்று பயன் பெற முடியும்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை (Micro, Small and Medium Enterprises Department) கொள்கை 2008ன் கீழ் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கும் இத்திட்டம் (Uyegp Scheme) செயல்படுத்தப்படுகிறது.
Uyegp Scheme - விண்ணப்பதாரரின் தகுதிகள் :
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற,
- குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
- 18 – 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு 55 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
- விண்ணப்பம் செய்பவரின் குடும்ப ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- இத்திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிக பட்சமாக ரூ.15 இலட்சம் வரை வங்கிகள் மூலமாக வழங்கப்படும் கடன் உதவிக்கு 25 சதவீதம் அல்லது அதிக பட்ச மானியம் ரூ.3.75 இலட்சம் மானியமாக பெற்று பயன் பெறலாம்.
Uyegp Scheme : படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் துவங்க www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். தகுதி உடையவர்கள் கடன் பெற்று பயன் பெறலாம். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அந்தந்த மாவட்ட தொழில் மைய அலுவலகத்தினை தொடர்பு கொண்டு, இந்த கடன் உதவி திட்டங்கள் தொடர்பாக கூடுதல் தகவல்களை கேட்டுப்பெறலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!