Vaa Vaathiyaar Release Date: கார்த்தியின் 'வா வாத்தியார்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி, க்ரித்தி ஷெட்டி, சத்யராஜ், கருணாகரன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வந்த படம் ‘வா வாத்தியார்’. இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக (Vaa Vaathiyaar Release Date) அறிவித்துள்ளதால் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி நடிப்பில் ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் இயக்குநர் நலன் குமாரசாமி. அவர் இப்படத்தை தொடர்ந்து X: Past Is Present என்ற படத்தில் கோடை விடுமுறை (Summer Holiday) என்ற பகுதியையும், ‘காதலும் கடந்துபோகும்’ படத்தையும், குட்டி ஸ்டோரி அந்தாலஜியில் ‘ஆடல் பாடல்’ குறும்படத்தையும் இயக்கினார். அதன் பிறகு நலன் இரண்டு ஹீரோ இணைந்து நடிக்கும் படம் ஒன்றை இயக்குவார் என சொல்லப்பட்டது. ஆனால் 2023-ல் கார்த்தி – நலன் கூட்டணியில் வா வாத்தியார் படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டு 2023 மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இதில் புரட்சி தலைவர் எம் ஜி ஆரின் தாக்கம் அதிகம் உள்ள நபராக கார்த்தி நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. சில பணச் சிக்கல்களால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டு மெதுவாகவே படம் உருவானதாக சொல்லப்படுகிறது.
டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது (Vaa Vaathiyaar Release Date)
இந்நிலையில் ‘வா வாத்தியார்’ படம் இந்த ஆண்டு பொங்கல் அல்லது தீபாவளிக்கு வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், டிசம்பர் மாதம் இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ (The Raja Saab) படம் வெளியாக இருந்த நிலையில், படம் தள்ளிப்போனதால் டிசம்பர் 5-ம் தேதி ‘வா வாத்தியார்’ படம் வெளியாகும் என்று ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் (Vaa Vaathiyaar Release Date) அட்டகாசமான போஸ்டர் அல்லது ஒரு ப்ரோமோ வீடியோவுடன் படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம் என கார்த்தி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ‘வா வாத்தியார்’ படத்தைத் தொடர்ந்து ‘சர்தார் 2’, ‘மார்ஷெல்’ மற்றும் கைதி 2, HIT 4 படங்களில் கார்த்தி நடித்து வருகிறார். இதில், சர்தார் 2’ அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!