Vaa Vaathiyaar Release Issue : கார்த்தியின் ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட ஐகோர்ட் தடை!
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 12-ம் தேதி (Vaa Vaathiyaar Release Issue) திரையரங்குகளில் திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றம் இத்திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
‘வா வாத்தியார்’ திரைப்படம்
நலன் குமாரசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி (கிருத்திகா ஷெட்டி) நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சத்தியராஜ் , கருணாகரன், ஆனந்தராஜ் மற்றும் சில்பா மஞ்சுநாத் போன்ற முன்னணி நடிகர்களும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளனர். இத்திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஞானவேல்ராஜா தொழிலதிபரிடம் பெற்ற கடன்
மறைந்த தொழிலதிபர் அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடந்த 2019ல் ரூபாய் 10 கோடியே 35 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அந்த தொகை ரூபாய் 10 கோடியே 35 லட்சம் ஆனது தற்போது 18 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூபாய் 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரமாக வளர்ந்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிலதிபரின் சொத்து
சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர் திவாலானவர் என்று அறிவித்து அவருடைய சொத்துக்களை நிர்வகிக்க சொத்தாட்சியரையும் நியமிக்க (Vaa Vaathiyaar Release Issue) உத்தரவிட்டது. தற்போது தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸின் சொத்துகளை சென்னை ஐகோர்ட்டின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து வருகின்றார்.
சென்னை ஐகோர்ட்டில் சொத்தாட்சியர் தாக்கல் செய்த மனு
தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸின் சொத்துகளை நிர்வகித்து வரும் சொத்தாட்சியர் தற்போது சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ஞானவேல்ராஜா என்பவர் தொழிலதிபர் அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் இருந்து வாங்கிய கடன் தொகை ரூபாய் 10 கோடியே 35 லட்சம் ஆனது தற்போது வட்டியுடன் சேர்த்து ரூபாய் 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரமாக வளர்ந்துள்ளது. இந்த கடன் தொகையை ஞானவேல் ராஜா திருப்பித் தரவில்லை என்றால், இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகிய நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட தடை விதித்திருந்தனர்.
மீண்டும் விசாரணைக்கு வந்த மனு (Vaa Vaathiyaar Release Issue)
இந்த நிலையில், கடந்த வாரம் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அச்சமயத்தில் ஞானவேல் ராஜாவுக்கு கடனை திருப்பி அளிக்க நீதிமன்றம் பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல் ராஜா கடனை திருப்பி அளிக்கவில்லை. எனவே அவரது சொத்துகளை நீதிமன்றம் முடக்க வேண்டுமென சொத்து ஆட்சியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். அதற்கு ஞானவேல் ராஜா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தற்போது ஞானவேல் ராஜா 3 கோடியே 75 லட்சம் ரூபாயை 24 மணி நேரத்தில் செலுத்துவார் என்றும் மீதமுள்ள தொகைக்கான சொத்து ஆவணங்களை ஞானவேல் ராஜா தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார். மீண்டும் விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள் கடன் தொகையில் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மட்டுமே படத்தின் மீதான தடையை நீக்க முடியும் என்று எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் ஞானவேல் ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரூ3 கோடியே 75 லட்சம் மட்டும் செலுத்த முடியும் என்றும், மேலும் படத்தை தற்போது வெளியிடவில்லை என்றால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்று வாதிட்டார்.
‘வா வாத்தியார்' படத்தை வெளியிட தடை
நீதிபதிகள் தரப்பினர் இதை ஏற்க மறுத்தனர். மேலும் நீதிபதிகள் “ஞானவேல் ராஜாவுக்கு ஒரே தவணையில் கடன் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்த பல வாய்ப்புகள் இந்த ஐகோர்ட்டு வழங்கிய போதும் அதை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இதற்கு மேலும் அவருக்கு சலுகை வழங்க வேண்டிய அவசியமில்லை. எனவே, கடன் தொகையை ஞானவேல் ராஜா திருப்பிச் செலுத்தும் வரை ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிடக்கூடாது என்றும், மேலும் அவருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை இந்த நீதி மன்றம் நீட்டிக்கிறது’ என உத்தரவிட்டுள்ளனர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!