Vadakkan Title Change : வடக்கன் திரைப்படத்தின் தலைப்பு மாற்றம்
பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வெளியாக இருந்த வடக்கன் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக (Vadakkan Title Change) தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கன் :
பாஸ்கர் சக்தி, சுசீந்திரன் இயக்கிய அழகர் சாமியின் குதிரை படத்திற்கு சொந்தக்காரர் ஆவார். அடிப்படையில் ஒரு எழுத்தாளரான இவர் பரத் எம் மகன் படத்தில் மருத்துவராக நடித்திருப்பார். எம் மகன், வெண்ணிலா கபடி குழு, பாண்டிய நாடு, நான் மகான் அல்ல ஆகிய படங்களுக்கு கதை எழுதிருந்தார். இவர் அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை எழுதியிருந்தார். தற்போது இவர் வடக்கன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். டிஸ்கவரி சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைரமாலா, ரமேஷ் வைத்யா, பிண்டு, வந்தனா ஆகியோர் நடித்துள்ளனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வடக்கன் படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த டீசரில், ஹீரோ ஒரு வடநாட்டு தொழிலாளியிடம் அடிவாங்கி வந்தது போலவும், அவரால் தன்னுடைய வேலை பாதிக்கப்படுவதை உணர்வதாகவும் காட்சிகள் அமைந்துள்ளன. மேலும் “எங்க பார்த்தாலும் வடக்கன்கள் வேலைக்கு வந்துடுறானுங்க. எல்லா வடக்கன்களையும் அடிக்க வேண்டும். ஒருத்தன் கூட நம்மூர்ல இருக்க இருக்கக்கூடாது. வெளியூர்ல இருந்து வந்தவன் இங்கு உள்ள வடையை சாப்பிட மாட்டானா, அவனுக்காக பேல்பூரி, பானிபூரி போட்டுட்டு இருப்பானா” என வசனங்கள் இடம்பெற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Vadakkan Title Change :
படத்தின் டீசரை பார்த்து இதுதான் கதை என்று மதிப்பிட வேண்டாம் என்று படத்தின் இயக்குனர் பாஸ்கர் சக்தி தெரிவித்திருந்தார். மேலும், வடமாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைதான் பார்க்கவே படத்தை எடுத்திருப்பதாகவும் கூறினார். இந்நிலையில் வடக்கன் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக (Vadakkan Title Change) தகவல் வெளியாகியுள்ளது. வடக்கன் என்ற தலைப்பை சென்சார் வாரியம் ஏற்க மறுத்துவிட்டதாகவும், இதனால் படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாகவும், படத்தின் புதிய தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!