தமிழகத்தில் கிராமப்புறங்களில் எளிதாக கிடைக்கும் கீரை வகைகளில் ஒன்றுதான் இந்த வல்லாரை கீரை ஆகும். தினசரி உணவில் (Vallarai Keerai) இந்த வல்லாரை கீரையை சேர்த்தால் உடலுக்கும் மனதுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது
வல்லாரை கீரை ரத்த ஓட்டத்தை சீராக்கும் வல்லமை பெற்றிருப்பதால் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்கும் மற்றும் ரத்த நாளங்களை வலுப்படுத்தும். இதனால் இதயம் சீராக செயல்படும் மற்றும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறையும். கால்களில் ஏற்படும் சீரான ரத்த ஓட்டமானது வெரிகோஸ் வீன்ஸ், மற்றும் கால்வலிப் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது
வல்லாரை கீரை கலந்த உணவுகள் நல்ல செரிமான சக்தி மற்றும் குடல் ஆரோக்கியத்தை வழங்குகின்றன. இவை செரிமான சக்தியை (ஜீரண சக்தியை) மேம்படுத்துவதால் நல்ல பசியை தூண்டும் மற்றும் மலச்சிக்கலை (Vallarai Keerai) போக்கும். வயிற்றில் ஏற்படும் அல்சர், காஸ்ட்ரைட்டிஸ் மற்றும் குடல் எரிச்சல் போன்ற நோய்களுக்கு நல்ல தீர்வு தரும்.
சீரான மன நிலையை ஊக்குவிக்கிறது
Stress, Anxiety மற்றும் Depression போன்றவை அதிகமாக உள்ள இன்றைய வாழ்க்கைச் சூழலில், வல்லாரை கீரை கலந்த உணவுகள் சீரான மன நிலையை ஊக்குவிக்கின்றன. இவை Cortisol (Stress hormone)-ன் அளவை குறைக்கிறது, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது மற்றும் இயற்கையான தூக்கத்தை மேம்படுத்துகிறது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
வல்லாரை கீரை மனித உடலில் உள்ள வெள்ளை அணுக்களை சிறந்த முறையில் செயல்படுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தியை (வைரஸ், பாக்டீரியா எதிர்ப்பு சக்தியை) அதிகரிக்கிறது. அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல் (Vallarai Keerai) மற்றும் பிற தொற்றுகளிலிருந்து விடுதலை தருகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலன் தருகிறது
வல்லாரை கீரை மனித உடலில் இன்சுலினின் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.
முடி ஆரோக்கியத்தை பேண உதவுகிறது (Vallarai Keerai)
வல்லாரை கீரை கலந்த உணவுகள், வல்லாரை எண்ணெய் மற்றும் வல்லாரைச் சாறை தலைமுடியில் பயன்படுத்துவது நல்ல முடி ஆரோக்கியத்தை பேண உதவும். இவை முடி உதிர்தலை குறைக்கும், நரை முடி தோன்றலை தாமதிக்கும் மற்றும் புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
திசு(Tissue) புதுப்பிப்பை வழங்குகிறது
வல்லாரை கீரை மனித உடலில் திசு (Tissue) புதுப்பிப்பை வழங்குவதால் காயங்கள் மற்றும் எரிச்சல்கள் விரைவில் குணமாகின்றன. அறுவை சிகிச்சைக்குப் பின் மனித உடல் மீண்டும் பழைய நிலையை விரைவில் அடைய (Vallarai Keerai) உதவுகிறது. மனித உடலில் ஏற்படும் தீக்காயங்களை விரைவில் குணமாக்குகிறது.
மூட்டு வலி குறைவுக்கு உதவுகிறது
வல்லாரை கீரை கலந்த உணவுகள் மூட்டு வலியை குறைத்து சிறந்த நிவாரணம் அளிக்கிறது.
சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கிறது
வல்லாரை கீரை கல்லீரலை சுத்தம் செய்யும் மற்றும் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும். சிறுநீரக சுத்திகரிப்பு மூலம் விஷப்பொருட்களை வெளியேற்றுகிறது மற்றும் உடல் வீக்கத்தை குறைக்கிறது.
சிறந்த சரும ஆரோக்கியம் தருகிறது
வல்லாரை கீரையில் உள்ள Asiaticoside ஆனது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது சரும சுருக்கத்தை தவிர்த்து இளமையான தோலை தருகிறது. முகப்பரு, வெள்ளை தழும்பு, மற்றும் கருந்தழும்புளுக்கு நல்ல தீர்வு தருகிறது.