-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
Vande Bharat Express Train: இந்தியாவில் அதிவேக வந்தே பாரத் விரைவு ரயில்
வந்தே பாரத் ரயில் (Vande Bharat Express) முக்கிய மாநகரங்கள் இடையே இயக்கப்படும் இண்டர்சிட்டி அதிவேக ரயில் ஆகும். இது 100 கி.மீ. வேகத்தில் தொடங்கிய 52 நொடிகளில் சென்றடைய வேண்டிய இடத்தை சேரக் கூடியது ஆகும். அதே சமயத்துல படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களின்(Vande Bharat Express) வேகம் 220 கி.மீ. ஆக உள்ளது. ரயில்களின் மோதல் தவிர்ப்பு மற்றும் பாதுகாப்பு வசதியை கருத்தில் கொண்டு முறையான தொழில்நுட்ப வசதி வந்தே பாரத் ரயில்களில் இடம்பெற்றுள்ளது.
இந்தியன் ரயில்வே மற்றும் மத்திய அரசு இணைந்து இந்தியாவில் அதிவேக வந்தே பாரத் விரைவு ரயில்கள் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. தற்போதைய சூழலில், அந்த வகையில் நாட்டின் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை - கோவை (Vande Bharat Express)
வந்தே பாரத் ரயில்(Vande Bharat Express) தனது சென்னை மற்றும் கோவை இடையே ரயில் சேவையை 08.04.2023 அன்று தொடங்கி உள்ளது. இந்த வந்தே பாரத் ரயில்(Vande Bharat Express) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.00 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும்.
பிரதமர் நரேந்திர மோடி சென்னை மற்றும் கோவை இடையே ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த பிறகு, இந்திய ரயில்வே மேலும் இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கியது. செகந்திராபாத் – திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
செகந்திராபாத் - திருப்பதி (Vande Bharat Express)
ஹைதராபாத்தை செகந்திராபாத் – திருப்பதி – வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திருப்பதியுடன் இணைக்கிறது. மூன்று மாதங்களுக்குள் தெலுங்கானாவில் இருந்து தொடங்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் ரயில் இந்த ஹைதராபாத்தை செகந்திராபாத்-திருப்பதி – வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும். செகந்திராபாத் – திருப்பதி என்ற இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை கிட்டத்தட்ட 3.30 மணிநேரம் குறைக்கும்.
சென்னை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்கள் பெங்களூருவை 4.25 மணி நேரத்தில் சென்றடையும். இது சென்னை – பெங்களூரு சதாப்தி விரைவு ரயிலை விட அரை மணி நேரம் மிகவும் விரைவாக சென்றடைகிறது. (i.e., 4.45 மணி – 4.25 மணி = 0.30 மணி).
சென்னை - பெங்களூரு (Vande Bharat Express)
இந்த வந்தே பாரத் ரயில் (Vande Bharat Express) மற்ற ரயில்களை விட குறைவான நிறுத்தம் மற்றும் அதிக வேகம் காரணமாக பயண நேரம் பாதியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியன் ரயில்வே மற்றும் மத்திய அரசு இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை 75ஆக உயர்த்த வேண்டும் என்று ஒரு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
அடுத்து வரும் 3 ஆண்டுகளில் இந்த ரயில் சேவையின் எண்ணிக்கையை 400ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. புதிதாக மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வகையில் புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்குவதற்கு இந்தியன் ரயில்வே மற்றும் மத்திய அரசு இணைந்து திட்டமிட்டுள்ளது.
தற்போது சென்னை – மைசூரு, செகந்திராபாத் – விசாகப்பட்டினம், டெல்லி – வாரணாசி, புது டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோவில், காந்திநகர் மற்றும் மும்பை, டெல்லி மற்றும் ஹிமாச்சல் மாநிலத்தில் உள்ள ஆம்ப் ஆண்டௌரா, நாக்பூர் – பிளாஸ்பூர், ஹவுரா – புதிய ஜைபாய்குரி ஆகிய வழித்தடங்களில் ஏற்கனவே வந்தே பாரத் ரயில் சேவை இயங்கி வருகிறது.
வந்தே பாரத் ரயில் சேவைகள், சிறந்த சராசரி வேகத்தில் இயக்க முடியும், இது பயண நேரத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








