Vanjaram Fish Benefits : வஞ்சிரம் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
கடல் மீன்களில் ‘வஞ்சிரம் மீன்’ மிகவும் பிரபலமானது. இதன் விலை அதிகமாக இருந்தாலும், அதன் சத்துக்கள், சுவை, ஆரோக்கிய நன்மைகள் மற்றும் எலும்புகள் குறைவாக இருப்பதால் குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை (Vanjaram Fish Benefits) விரும்பி உண்கின்றனர். இதில் உள்ள புரதம், ஓமேகா-3 கொழுப்பு அமிலம், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை உடல் நலத்திற்கும், மூளை வளர்ச்சிக்கும், இதய ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் பெரிதும் உதவுகின்றன.
வஞ்சிரம் மீன் நன்மைகள் (Vanjaram Fish Benefits)
இதய ஆரோக்கியம்
வஞ்சிரம் மீன் ஓமேகா-3 கொழுப்பு அமிலத்தின் சிறந்த ஆற்றல் மூலமாகும். ஓமேகா-3 கொழுப்பு அமிலம் உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, கொலஸ்ட்ராலை குறைத்து, இதய சம்மந்தமான கோளாறுகளை தடுக்கிறது. இதய நோய் அபாயம் உள்ளவர்கள் தொடர்ந்து வஞ்சிரம் மீன் சாப்பிட்டு வந்தால் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
எலும்பு மற்றும் பற்கள் வலிமை
எலும்பு மற்றும் பற்கள் ஆரோக்கியத்திற்கும் வலிமைக்கும் வஞ்சிரம் மீன் மிகச் சிறந்த உணவாகும். இந்த மீனில் வைட்டமின் D, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற முக்கிய இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இணைந்து எலும்புகளை உறுதியாக்கும் (Vanjaram Fish Benefits) பணியை செய்கின்றன. வைட்டமின் D உடலுக்கு தேவையான கால்சியத்தை சரியாக உறிஞ்சி கொள்ள உதவுகிறது. மேலும் குழந்தைகள் மற்றும் வளர்ந்து வரும் இளைஞர்களின் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை சத்துக்கள் வஞ்சிரம் மீனில் நிறைந்துள்ளன. இதுமட்டுமல்லாமல் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் போன்றோருக்கு சிறந்த ஆரோக்கிய உணவாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி
வஞ்சிரம் மீனில் நிறைந்துள்ள ஓமேகா-3 கொழுப்பு அமிலம், உடலில் ஏற்படும் அழற்சியை குறைத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சமநிலைப்படுத்துகிறது. மேலும் காய்ச்சல், சளி, வைரஸ் தாக்குதல் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு (Vanjaram Fish Benefits) அளிக்கிறது. உடலில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்-ஆக செயல்படும் செலினியம் புற்றுநோய் நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இந்த மீனில் நிறைந்துள்ள வைட்டமின்களான D, B12, A, E மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நோய் எதிர்ப்பு செல்களின் செயல்பாடுகளை வலுப்படுத்துகின்றன.
புரதச் சத்து நிறைந்தது
100 கிராம் வஞ்சிரம் மீனில் 20 முதல் 22 கிராம் புரதம் நிறைந்துள்ளது. இந்த புரதம் எளிதில் செரிமானமாகி, உடலில் உறிஞ்சி கொள்ளப்படுகிறது. இந்த புரதம் எலும்புகள், தோல், முடி, நகம் போன்ற உடல் பகுதிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் (Vanjaram Fish Benefits) உதவுகிறது. வளரும் குழந்தைகள், உடல் உழைப்பு அதிகம் செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் வஞ்சிரம் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மிகுந்த சக்தியையும், உடல் வலிமையையும் தருகிறது.
மூளை வளர்ச்சி
பள்ளி குழந்தைகள் வஞ்சிரம் மீன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களின் நினைவாற்றல், சிந்தனை திறன், கற்றல் திறன் ஆகியவை மேம்படுகின்றன. மேலும் முதியவர்கள் மறதி, பார்கின்சன் போன்ற நரம்பியல் குறைபாடுகளை தடுக்கவும் வஞ்சிரம் மீன் உதவுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!