-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
Veerappan Daughter: கதாநாயகியாக அறிமுகமாகும் வீரப்பன் மகள் விஜயலட்சுமி
KNR ராஜா நடித்து இயக்கிய படம் “மாவீரன் பிள்ளை”. மறைந்த வீரப்பனின் மகள் (Veerappan Daughter) விஜயலட்சுமி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நடிகர் ராதாரவி தெருக்கூத்து கலைஞராக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு மஞ்சுநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், பாடல்களுக்கு ரவிவர்மா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை பிரேம் அமைத்துள்ளார். “ஜூலியன் படத்தொகுப்பு செய்துள்ளார். பாடல்களை உலகமணி எழுதியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடந்தது. இதில் இயக்குனர் பேரரசு, அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா, நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ், வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளரும், இயக்குனருமானKNR ராஜா, “ஒவ்வொரு வீட்டிலும் மதுவால் ஏதாவது ஒரு வகையில் பிரச்னை ஏற்படுகிறது. மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மிகுந்த சிரமத்துடன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளேன் என்றார் கூறினார். இசையமைப்பாளர் ரவிவர்மா கூறும்போது, “இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் உள்ளன. குறிப்பாக “சாராயம் அபாயம்” என்ற பாடலை பாடலாசிரியர் உரைமணி எழுதி பாடியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்களுக்கு மட்டுமே நான் இசையமைத்துள்ளேன். பின்னணி இசையை பிரேம் அமைத்துள்ளார். முதல் படத்திலேயே கமர்ஷியல் பணம் சம்பாதிக்க நினைக்காமல் இப்படிப்பட்ட சமுதாயத்துக்குத் தேவையான படத்தை தயாரிப்பாளர் ராஜா எடுத்திருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவரது அண்ணன் சிறுவயதில் மது குடித்து இறந்ததால் ஏற்பட்ட பாதிப்புதான். இது தர்மபுரி மாவட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது.
நடிகை விஜயலட்சுமி பேசுகையில், “எனக்கு சின்ன வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனது தந்தை தனிப்பட்ட ஒழுக்கத்துடன் வாழ்ந்து முன்னுதாரணமாக விளங்கினார். இந்த சமூகத்தில் ஒருபக்கம் காதல், மறுபக்கம் குடி என்று பெண்கள் சீரழிக்கப்படுகின்றனர்.இதனை மையமாக வைத்து எடுத்தால் தான் விழிப்புணர்வு ஏற்படும். அதனால்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன், கண்டிப்பாக என் தந்தையின் பெயரை எந்தக் களங்கமும் இல்லாமல் பாதுகாப்பேன்” என்றார்.
இயக்குனர் பேரரசு பேசும்போது ஹீரோ,ஹீரோயின், இயக்குனர் யார் முடிவு செய்யாதீர்கள். படம் என்ன சொல்கிறது என்று படத்தைப் பாருங்கள். நம்ம ஊரில் முதல்வர் மகனும் சினிமாவில் நடிக்கலாம்.. வீரப்பன் மகளும் நடிக்கலாம்.. சினிமா யாரையும் ஏற்றுக்கொள்ளும்.. அந்த வகையில் வீரப்பன் மகள் (Veerappan Daughter) விஜயலட்சுமியை புதுமுகமாக ஆதரிப்போம். தெருவுக்கூத்து அழிந்து வருகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் டாஸ்மாக் முன்பு குடித்துவிட்டு விதவிதமான தெருக்கூத்து ஆடுபவர்களும் இருக்கிறார்கள். விஜய்,பிரபுதேவாவை விட குடிமகன் சிறப்பாக ஆடுகிறார்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது அருந்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுவிலக்கு வாக்குறுதியை கொடுத்துவிட்டு, அதே மதுவை கொடுத்து ஓட்டு கேட்கின்றனர். மதுவிலக்கை ரத்து செய்வதாக சொன்னால் வாக்களிக்க மாட்டார்கள் என்று அரசியல்வாதிகள் பேசும்போது போதைப்பொருள் பட்டியலில் மதுவை எங்கும் சேர்க்கவில்லை. சாராயம் விற்கலாம் என்பதால், வரும் நாட்களில் டாஸ்மாக் போல் கஞ்சா கடைகள் துவங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆன்லைன் ரம்மியால் சில சமயம் ஒன்றிரண்டு பேர் உயிரிழக்கிறார்கள்.. ஆனால் குடிப்பழக்கத்தால் உடல் உபாதைகளாலும் விபத்துகளாலும் தினமும் பலர் உயிரை இழக்கிறார்கள்.. ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வேண்டும் என்று சட்டசபையில் குரல் கொடுப்பவர்கள் ஏன் குரல் எழுப்புவதில்லை. மதுவை ஒழிக்க வேண்டும்.. மது விற்கும் கோட்டையை அரசு நடத்துவது வெறுக்கத்தக்கது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கூட தேவையில்லை.. ஓசி பஸ் தேவையில்லை.. நீட் தேர்வை ரத்து செய்வீர்களோ இல்லையோ, அதுவரை ஏழை மாணவர்களும் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் பிறகு ஏன் மாணவர்களுக்கு நீட் பயிற்சி கொடுக்க கூடாது.
இது படம் சமுதாயத்திற்காக எடுக்கப்பட்ட படம்,” என்றார்.
ராஜேஸ்வரி பிரியா பேசும்போது வீரப்பன் ஒரு உண்மையான கதாநாயகன். வீரப்பன் மகள் (Veerappan Daughter) நடிக்க வந்திருப்பது பெருமைக்குரிய விஷயம். திரைப்படம் என்றாலே பணம் சம்பாதிக்கும் தொழிலாகிவிட்டது. இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ராஜா போன்றவர்கள் மட்டுமே உள்ளே நுழைந்து சமூகத்தை மாற்றம் விதமாக படம் எடுக்க முடியும். வடமாவட்டங்களைச் பின்னணியாக வைத்து இயக்கி இருப்பது பாராட்டுக்குரியது. பள்ளிகளில் போதைக்கு எதிராக பேசும் போது ஏன் அங்கு மதுவை ஏன் பேசுவதில்லை. வெளிநாடுகளிலும் மது விற்கப்படுகிறது.ஆனால் இங்கு ஏன் அதிக மரணம்?ஏனென்றால் இங்கு தருவது மது அல்ல விஷம் என்றார்.
நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில் ”அரசியல் ரீதியாக மதுவுக்கு எதிராக ராமதாசும், அன்புமணி ராமதாசும் குரல் கொடுத்து வருகின்றனர். இவர்கள் வழி வந்த இந்தப் படத்தின் இயக்குநர் ராஜா, சினிமா மூலம் மதுவுக்கு எதிராகக் குரல் எழுப்பும் முயற்சியை எடுத்துள்ளார். அதை நாம் பாராட்ட வேண்டும். வீரப்பன் ரியல் ஹீரோ. மகளின்(Veerappan Daughter) நடிப்பை வரவேற்போம். இந்த மேடையில் நான் அதிகம் பேசியதாக நீங்கள் நினைத்தால், என் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமானால், எனக்குப் பதிலாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர் KNR ராஜா மீது வழக்குப் போடுங்கள்” என்று நகைச்சுவையாக கூறினார். இந்த படத்தில் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.








