Gistak Media

Vettaiyan என தலைவர் 170 படத்திற்கு தலைப்பு அறிவிப்பு

ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்திற்கு “Vettaiyan” என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கறுப்பாக இருந்தால் சினிமாவில் ஹீரோவாக முடியாது என்ற மூடநம்பிக்கையை உடைத்து சூப்பர் ஸ்டாராகியுள்ளார் ரஜினிகாந்த். இந்தியாவின் ஸ்டைல் ​​ஐகானாக திகழும் ரஜினிகாந்த் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். ரீ-ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ரசிகர்களை கவர்ந்து வரும் முத்து திரைப்படம் அப்பவே ஜப்பானில் ரசிகர்களை கவர்ந்து இன்னமும் ரஜினியின் புதிய படங்களுக்கு ஜப்பானில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு பெரிதும் விரும்பப்பட்ட ஜெயிலரை இயக்கி தமிழ் சினிமாவில் ரஜினி ராஜ்ஜியத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளார் நெல்சன். காலா, தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், ஜெயிலர் 600 கோடி வசூல் சாதனை படைத்து இன்டஸ்ட்ரி ஹிட் ஆனது.

4 மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிய ரஜினி :

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களிலும் நேரிலும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அவர் தனது மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா மற்றும் சௌந்தர்யாவின் கணவர் மற்றும் பேரன்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. இந்நிலையில், ரஜினி தனது பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளம் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையை சுற்றியுள்ள பல இடங்களில் மழைநீர் இன்னும் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது அறக்கட்டளை மூலம் 15க்கும் மேற்பட்ட லாரிகளில் 20க்கும் மேற்பட்ட நிவாரண பொருட்களை நான்கு மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தலைவர் 170 டைட்டில் "Vettaiyan" :

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அடுத்ததாக த.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் ஃபாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் தலைவர் 170 படத்திற்கு “Vettaiyan” டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். “குறி வச்சா இரை விழணும்” என ரஜினி பேசும் வசனம் வேறலெவல். ஜெய்பீம் படத்தைவிட தலைவர் 170 வலுவான திரைக்கதையை கொண்டிருக்கும் என்பது இப்போது உறுதியாகிவிட்டது. ஜெயிலரைப் போலவே, இந்தப் படமும் மல்டி ஸ்டாரர் நடிகர்களைக் கொண்ட பான் இந்தியா படமாகும், மேலும் இது பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெறும் என்று தெரிகிறது. அடுத்து தலைவர் 171 படத்தின் அப்டேட் வருமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top