Gistak Media

Viduthalai 2 Update : தென்காசியில் நடைபெறும் 'விடுதலை 2' படப்பிடிப்பு

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான ‘விடுதலை’ படம் வெளியானது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, சேத்தன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். முதல் பாகத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் மேற்கொண்ட நிலையில், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. ஆனால் முதல் பாகத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் கதைக்களத்தில் மாற்றம் செய்து வெற்றிமாறன் படப்பிடிப்பை நடத்தி வருவதாகவும் தற்போது படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்று வருவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

தென்காசியில் விடுதலை 2 சூட்டிங் :

விஜய் சேதுபதி, சூரி, சேத்தன் உள்ளிட்ட நடிகர்களில் நடிப்பில் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து (Viduthalai 2 Update) வருகிறது. முதல் பாகத்தை விட இந்த படம் அதிக வரவேற்பை பெறும் என நடிகர் சூரி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். முதல் பாகத்தில் சூரி அதிக காட்சிகளில் நடித்தார். அவருக்கும் பவானி ஸ்ரீக்கும் இடையேயான காதலும் நன்றாகவே காட்டப்பட்டது. படத்தில் பெருமாள் வாத்தியார் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்த காட்சிகள் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் பங்கு அதிகமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் இணைந்துள்ளார். இருவரின் பிளாஷ்பேக் காட்சிகள் நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்காசியில் நடைபெற்று வருவதாகவும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் மேற்பார்வையில் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஷெட்யூலுக்குப் பிறகு படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Viduthalai 2 Update - அமெரிக்கா செல்லும் வெற்றிமாறன் :

படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு இயக்குனர் வெற்றிமாறன் அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு பிளாஷ்பேக் காட்சிகள் உள்ளன. அதில், டீ-ஏஜிங் டெக்னாலஜி மூலம் அவரை இளமையாக மாற்றும் முயற்சியில் (Viduthalai 2 Update) வெற்றிமாறன் ஈடுபட்டுள்ளார். இதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்கா பறக்க உள்ளார். இந்த பணிகள் முடிந்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top