Gistak Media

பிரமாண்டமாக நடைபெறும் "விடுதலை" இசைவெளியீட்டு விழா

Viduthalai Audio Launch: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவானது வருகின்ற மார்ச் 8 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி இதில் கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கௌதம் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கிஷோர் குமார் மற்றும் சேதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார்.

விடுதலை திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்திலிருந்து வெளியான முதல் பாடலான “ஒன்னோட நடந்தா” படலானது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் வெளியிடும் நிகழ்ச்சியான இசைவெளியீட்டு விழாவை வருகின்ற மார்ச் 8 ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த படக்குழு தெரிவித்துள்ளது. இந்த இசைவெளியீட்டு விழாவில் பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரபல நடிகர் ‘தனுஷ்’ கலந்துகொள்ள உள்ளார். இயக்குனர் வெற்றிமாறனும் தனுஷும் நெருங்கிய நண்பர்கள் அதுமட்டுமில்லாமல் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதால் தனுஷ் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இசைமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Slideshows

Scroll to Top