-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
Viduthalai Movie Review: வெற்றி மேல் வெற்றி வெற்றிமாறனுக்கு
மாபெரும் எதிர்பார்ப்பை வென்றது வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நாயகனாக நடித்து இன்று (31.03.2023) வெளிவந்துள்ள திரைப்படம் விடுதலை 1. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் விடுதலை 1 ஆகும்.
சூரி கதையின் நாயகனாக நடித்திருப்பது இதுவே முதல் முறை ஆகும். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ளது.
வெற்றிமாறனின் இயக்கம், விஜய் சேதுபதி கதாபாத்திரம் என்ன? இளையராஜாவின் இசை என விடுதலை 1 படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை விடுதலை திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
திரைக்கதை
அரசாங்கம் மலைப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வரும் இடத்தில் சுரங்கத்தை தோண்ட முடிவெடுக்கிறது. ஆனால், இதனால் மக்களின் இடம் மற்றும் வாழ்வாதாரம் பறிபோகும் என்று இந்த அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக அந்த மலைப்பகுதி பெருமாள் வாத்தியார் ( விஜய் சேதுபதி ) தலைமையில் மக்கள் படை ஒன்று உருவாகிறது.
பெருமாள் வாத்தியார் தனது மக்கள் படையின் மூலம் எதிர்த்து போராடி அரசாங்கத்தை தடுத்து சுரங்கத்தை தோண்டவிடாமல் செய்கிறார். அரசாங்கத்தால் பெருமாள் வாத்தியாரது மக்கள் படையை முழுமையாக ஒழித்துக்கட்ட சிறப்பு படை நியமனம் செய்யப்படுகிறது. கைதேர்ந்த சிறப்பு படை காவல் அதிகாரிகளை வைத்து பெருமாள் வாத்தியாரின் மக்கள் படையை பிடிக்க முயற்சி செய்கிறார்கள்.
இந்த போராட்டத்தில் மக்கள் படையிலும் மற்றும் சிறப்பு படையிலும் எண்ணிலடங்காத உயிர் இழப்புக்கள் ஏற்படுகின்றன. இந்த போராட்டம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது.
அரசாங்கத்தை எதிர்த்து பெருமாள் வாத்தியார் தொடர்ந்து போராடி வருகிறார். இந்த சமயத்தில் சிறப்பு படையில் கதையின் நாயகன் சூரி ( குமரேசன் ) ஜீப் ட்ரைவாக சேர்கிறார். ஆரம்பத்தில் சூரி மலைப்பகுதி Check Postல் பணிபுரியும் அதிகாரிகளுக்கு ஜீப் மூலம் சாப்பாடு கொண்டு செல்லும் வேலையை மட்டும்தான் பார்க்கிறார். நாளடைவில் தமிழரசி ( பவானி ஸ்ரீ ) என்ற மலைபகுதியில் வாழும் பெண்ணின் மீது காதல் கொள்கிறார்.
இந்த சமயத்தில் கவுதம் மேனன் ( DSP சுனில் மேனன் ) பெருமாள் வாத்தியாரை கண்டு பிடித்து கைது செய்ய புதிய அதிகாரியாக நியமிக்கப் படுகிறார்.
சூரியின் காதல் ட்ராக் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க மற்றொரு பக்கம் பெருமாள் வாத்தியாரை தேடும் பணி ஆனது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெருமாள் வாத்தியார் தங்கியிருக்கும் இடத்தை ஒரு நாள் சூரி பார்த்து விடுகிறார்.தன்னுடைய மேல் அதிகாரியான கவுதம் மேனனிடம் ஒரு நாள் இதை சொல்ல சூரிக்கு வாய்ப்பு கிடைத்தது.
பெருமாள் வாத்தியாரை பிடிக்க அவர் பதுங்கியிருக்கும் இடத்திற்கு கவுதம் மேனன் மற்றும் பிற அதிகாரிகளுடன் சூரி செல்கிறார். இதைத் தொடர்ந்து நடந்தது என்ன..? என்பதே மீதி கதை. 25 ஆண்டுகளாக பிடிபடாத பெருமாள் வாத்தியார் பிடிபட்டாரா? இல்லையா? பெருமாள் வாத்தியாரின் மீது சுமத்தப்பட்டிருக்கும் பழிகள் உண்மையானதா? என்பதே மீதி படத்தின் கதை.
கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த கலைஞர்கள்
இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய எதார்த்தமான இயக்கத்தின் மூலம் படம் பார்ப்பவர்களை மீண்டும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சில தொய்வுகள் ஆங்காங்வே இருந்தாலும் மிரட்டும் திரைக்கதை மற்றும் படத்தில் இடம்பெறும் வசனங்கள் என கதைக்களத்தை நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.
போலீஸ் அதிகாரிகள் எளிய மக்கள் மீது செய்யும் கொடுமைகள், கடுமையாக பாயும் சட்டம், போலீஸ் அதிகாரிகள் குறிப்பாக பெண்களிடம் நடந்துகொள்ளும் விதம் உள்ளிட்ட காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்து வியப்பில் ஆழ்த்துகிறது. தனது யதார்த்தமான நடிப்பில் கதையின் நாயகனாக வரும் சூரி மக்கள் இதயங்களை மற்றும் கைதட்டல்களை அள்ளுகிறார்.
சூரி பேசும், மக்களுக்கு உதவதானே காவல் துறை மற்றும் தவறு செய்தால் தானே மன்னிப்பு கேட்கவேண்டும் போன்ற வசனங்கள் மிகவும் அருமை. மேலும் ஸ்டண்ட் காட்சிகளில், குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கையில் துப்பாக்கி கிடைத்தவுடன் சூரி எடுக்கும் அவதாரம் சபாஷ் என பாராட்ட வைக்கிறது. அதுமட்டுமின்றி காதல் காட்சியிலும் அழகாகன நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சூரிக்கு இணையாக கதாநாயகியாக நடித்துள்ள பவானி ஸ்ரீ காவல் அதிகாரிகளால் கொடுமையை அனுபவிக்கும் காட்சியில் தன்னுடைய நடிப்பின் மூலம் அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார். இப்படத்தில் சில காட்சிகள் மட்டுமே பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இப்படத்தின் இரண்டாம் பாகமான விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதியின் ஆட்டம் பெரும் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எளிய மக்களுக்கு எதிராக ஈவு இரக்கம் காட்டாத மேல் காவல் அதிகாரிகளில் ஒருவராக வரும் நடிகர் சேத்தன் சிறப்பாக நடித்துள்ளார். கவுதம் மேனன் DSP சுனில் மேனனாக வந்ததும் படம் சூடு பிடிக்கிறது. தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் ராஜிவ் மேனன் கச்சிதமாக நடித்துள்ளார். படத்தில் நடித்துள்ள அனைவரும் திரைக்கதையோடு ஒன்றிப்போய் நடித்துள்ளார்கள்.
இளையராஜாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பலம் தருகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பு ஆக உள்ளது. குறிப்பாக வேல்ராஜ் மலைப்பகுதிகளில் கேமராவை கையாடுள்ள விதமும், லாக்கப் குள் கேமராவை கையாண்ட விதமும் அருமையாக உள்ளது. படத்தின் எடிட்டிங் கன கச்சிதமாக உள்ளது. ஆக்ஷன் காட்சிகள் வடிவமைத்த விதம் அருமையாக உள்ளது.








