Gistak Media – Cinema News | Trending News | Latest News

Vignesh Shivan Next Movie: விஜய் சேதுபதியுடன் இணையும் விக்னேஷ் சிவன்

இயக்குனர் Vignesh Shivan டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுடன் களமிறங்க உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் லவ் டுடே படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இவர்களுடன் கைகோர்த்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதை தொடர்ந்து ‘நானும் ரௌடிதான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தார். இதில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Vignesh Shivan இயக்கிய முதல் படம் தோல்வி அடைந்ததால் இவரை நம்பி எந்த தயாரிப்பு நிறுவனமும் முன்வரவில்லை. அப்படியே தயாரிப்பு நிறுவனம் முன்வந்தாலும் எந்த ஹீரோவும் நடிக்க சம்மதிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சேதுபதி நடிக்க சம்மதித்தார். நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது.

2015 வெளியான இந்த திரைப்படம் Vignesh Shivan-க்கு திரைத்துறையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நடிகர் சூரியா நடிப்பில் உருவான ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைதரவில்லை. இதனையடுத்து விக்னேஷ் சிவன் மற்றும் சேதுபதி கூட்டணியில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் இது வெற்றி பாதைக்கு கொண்டு சென்றது. இந்த வெற்றியை தொடர்ந்து AK62 படத்தை இயக்கம் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் கதையில் தயாரிப்பாளர்களுக்கு திருப்தி இல்லாததால் விக்னேஷ் சிவனை படத்தில் இருந்து நீக்கிவிட்டனர்.

Vignesh Shivan AK62-ல் தனக்கு நடந்த அவமானத்தை போக்க படமெடுக்க இறங்கினார். விஜய் சேதுபதி மற்றும் லவ் டுடே படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இருவரையும் சந்தித்து தயார் செய்து வைத்திருந்த ஆக்சன் கதையை கூறினார். இருவரும் கதைக்கு சம்மதித்துள்ளனர். எனவே இந்த படம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுடன் உருவாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Slideshows

Scroll to Top