Gistak Media

Vijay And Sivakarthikeyan Clash On Pongal : ஜன நாயகனுக்கு போட்டியாக பொங்கல் ரேஸில் களமிறங்கும் பராசக்தி

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, ராணா டகுபதி, பேசில் ஜோசப் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘பராசக்தி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால் பொங்கல் போட்டியில் இருந்து படம் பின்வாங்குகிறதா? என்ற கேள்வி சமூக வலைத்தளத்தில் கிளம்பியது. ஆனால், படக்குழு தற்போது பொங்கலுக்கே பராசக்தி படத்தை ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்து இயக்குநர் சுதா கொங்கரா (Vijay And Sivakarthikeyan Clash On Pongal) சமூக வலைதள பக்கங்களில் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியாகும் பராசக்தி (Vijay And Sivakarthikeyan Clash On Pongal)

2026-ம் ஆண்டு பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படம் வெளியாகும் என ஆகாஷ் பாஸ்கரன் ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். ஆனால், பராசக்தி படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டிருந்த நிலையில், பொங்கல் போட்டியில் பராசக்தி வருவது சந்தேகம் தான் என்ற பேச்சுக்கள் கோலிவுட்டில் கிளம்பின. இதே பொங்கல் பொங்கலுக்கு நடிகர் விஜயின் கடைசி படமான `ஜன நாயகன்’ படம் ஜனவரி 9 வெளியாகும் என படக்குழு முன்பே அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜன நாயகனுக்கு போட்டியாக 2026-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்ப நிதி வெளியிடுகிறார்.

ஜன நாயகன் உடன் மோதல் இல்லை

Vijay And Sivakarthikeyan Clash On Pongal - Gistakmedia

கோட் படத்தில் துப்பாக்கி வாங்கிய விஜய்யுடன் சிவகார்த்திகேயன் பொங்கல் போட்டியில் மோத உள்ளார் என்ற பேச்சுக்கள் அடிபட்டன. விஜய்யின் ஜன நாயகன் படம் ஜனவரி 9-ம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பராசக்தி படம் ஜனவரி 9-ம் தேதி வருமா? என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், ஜனவரி 14-ம் தேதி பராசக்தி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 5 நாட்கள் கலெக்‌ஷனை ஜன நாயகன் அள்ளிவிடும் (Vijay And Sivakarthikeyan Clash On Pongal) என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதே சமயத்தில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், அந்த படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா? என்ற எதிர்பார்ப்பு சூர்யா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top