Vijay Antony Live Concert: இசை நிகழ்ச்சியை அறிவித்த விஜய் ஆண்டனி
Vijay Antony Live Concert: விஜய் ஆண்டனி டிசம்பர் மாதம் கோவை, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார். இதனை அவர் தனது X பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் சமீபகாலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இசைக் கச்சேரிகளை நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏ.ஆர். ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜ், தேவா உள்ளிட்ட பலர் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நேரடி இசை நிகழ்ச்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் கடந்த மாதம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த நேரடி இசை நிகழ்ச்சி நடந்த போது ஏற்பட்ட குளறுபடியால் பெரும் சர்ச்சைக்குள்ளாகி இணையத்தில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு துள்ளலான பாடல்களை கொடுத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. தற்போது பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராக திகழ்ந்து வருகிறார்.
டிஷ்யூம் திரைப்படம் தான் விஜய் ஆண்டனி இசைமைத்த முதல் படம் என்றாலும், ஆனால் முதல் வெளியீடு ‘சுக்ரன்’ படம் தான். இப்படத்தில் இடம்பெற்ற “சப்போஸ் உன்னை காதலிச்சு…” என்ற பாடல் இன்றுவரை எவர்கிரீன் பாடலாக இருந்து வருகிறது. முதல் படத்திலேயே கவனம் பெற்ற விஜய் ஆண்டனி, படங்களுக்கு மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களுக்கும் இசையமைத்துள்ளார்.
டைலாமோ, நாக்கு முக்க போன்ற துள்ளலான பாடல்களால் திரையுலகில் பிரபலமானார். 2012ஆம் ஆண்டு வெளியான “நான்” படத்தின் மூலம் ஹீரோவாக தனது நடிப்புத் திறமையை நிரூபிக்கத் தொடங்கிய அவர், பின்னர் சலீம், பிச்சைக்காரன், திமிரு புடிச்சவன், சைத்தான், யமன், காளி, அண்ணாதுரை, பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட பல படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
கடந்த அக்டோபர் 6ஆம் தேதி இவர் நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘ரத்தம்’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிப்பில் கவனம் செலுத்தி வரும் விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, டிசம்பர் 2-ம் தேதி கோவையிலும், 16-ம் தேதி பெங்களூருவிலும், டிசம்பர் 31-ம் தேதி சென்னையில் புத்தாண்டு விழாவாகவும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் https://bit.ly/vijayantonybcc என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என விஜய் ஆண்டனி தனது இணையதள பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தற்கொலை செய்து கொண்டார், விஜய் ஆண்டனி மிகவும் மனம் உடைந்து போன அவர் அந்த சோகத்தில் இருந்து மெல்ல மீண்டு வருகிறார். இந்த இசை நிகழ்ச்சி நிச்சயம் அவருக்கு நல்ல மனமாற்றத்தை தரும் என்பது ரசிகர்களின் கருத்தாக கூறி வருகின்றனர்.
Latest Slideshows
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!
-
T20 World Cup Semi Final : டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா.. இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்.!
-
SA vs NZ t20 : ஆலன் அதிரடி சதம்.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து.!
-
India vs England T20 : டி20 உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை.!
-
Artemis II : 50 ஆண்டுக்குப் பின் மீண்டும் நிலவுக்கு பயணம்.. நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 விண்கலம் தயார்!
-
Central Bank of India Recruitment : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 275 அதிகாரி பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
SA vs NZ Semi Final : டி20 உலகக் கோப்பை.. தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை!
-
IND vs AFG Schedule : இந்தியா - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு.!
-
KITE-QTrack App : வினாத்தாள்–விடைத்தாள் லைவ் டிராக்.. புதிய ஆப் அறிமுகப்படுத்திய கேரள அரசு.!