Vijay Makkal Iyakkam Political Meeting : விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை கூட்டம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தளபதி விஜய் அரசியலுக்கு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவது குறித்து தளபதி விஜய்யின் ஆலோசனை கூட்டம் (Vijay Makkal Iyakkam Political Meeting) இன்று நடைபெற்றது.
தளபதி விஜய் :
இயக்குனர் சந்திரசேகர் மற்றும் பாடகி ஷோபாவின் மகன் விஜய். ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய், ஆரம்ப காலத்தில் பல விமர்சனங்களை சந்தித்தார். ஆனால், நாளடைவில் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நடிகராகவும், உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகராகவும் மாறிவிட்டார். தளபதி விஜய் தற்போது இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் மற்றும் பிரபலமான நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் அவரது சினிமா மற்றும் சமூகப் பணிகளை ஒருங்கிணைக்கும் இயக்கமாக உருவாகி வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக முன்னாள் எம்பி புஸ்ஸி ஆனந்த் பணியாற்றி வருகிறார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் நிர்வாகிகளாக பணியாற்றி வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கம் விஜய்யின் ரசிகர் மன்றம் மட்டுமின்றி சமூகப் பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது.
விஜய்யின் அரசியல் செயல்பாடு :
தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய் சொல்லும் அனைத்து கருத்துகளும் மக்களிடையே குறிப்பாக அவரது ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தளபதி விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவ்வப்போது என்ன செய்திகள் வந்தாலும் இந்த ஆண்டு அனைத்து விஷயங்களையும் ஒரே முடிவோடு கையாண்டு வருகிறார் தளபதி விஜய் என்பதை அவரது செயல்கள் காட்டுகின்றன.
தளபதி விஜய் கடந்த சில வருடங்களாக தனது அரசியல் கருத்துக்களையும், நலத்திட்ட உதவிகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறார். இலங்கைத் தமிழர் பிரச்சனை, மருத்துவ அட்டை கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட அனிதா, தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனை என பல பிரச்சனைகளில் தன் கருத்தையும், முனைப்பையும் தெரிவித்திருக்கிறார் விஜய். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண பொருட்கள் வழங்குவது என பல விஷயங்களை செய்து வருகிறார் விஜய். இவை அனைத்தும் விஜய் தனது அரசியல் பயணத்திற்கு அமைக்கும் அடித்தளமாக மக்களாலும் ரசிகர்களாலும் பார்க்கப்படுகிறது.
Vijay Makkal Iyakkam Political Meeting :
வரும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் அரசியல் களம் காண்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், கிட்டத்தட்ட 150 நிர்வாகிகள் பங்கேற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் (Vijay Makkal Iyakkam Political Meeting) பனையூரில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதுவரை நேரடி அரசியல் கருத்துகளை கூறாத தளபதி விஜய், இந்த ஆலோசனை கூட்டத்தில் பல நேரடி அரசியல் கருத்துக்களை கூறியதாகவும் சில தகவல்களை வெளியாகியுள்ளது. மேலும் சமீபத்தில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு விஜய் மக்கள் இயக்கம் வழங்கிய நலத்திட்ட உதவிகளையும் விஜய் பாராட்டினாராம். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவதா அல்லது ஏதேனும் கட்சிக்கு ஆதரவளிப்பதா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய அடிமட்ட தொண்டர்களுக்கு பொறுப்பு வழங்கவும், விஜய் மக்கள் இயக்கத்திற்கு நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டியை உயர்த்தவும் விஜய் கூறியுள்ளார். தற்போது நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் பல விஷயங்களை முன்னிறுத்தி வரும் இந்த வேலையில் தளபதி விஜய்யின் இந்த ஆலோசனை கூட்டம் (Vijay Makkal Iyakkam Political Meeting) அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தளபதி விஜய் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவாரா அல்லது ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Latest Slideshows
-
Ra-Next Real Estate : ரியல் எஸ்டேட் டிஜிட்டல் கட்டமைப்பு தர முகமையாக ராநெக்ஸ்ட்.. அங்கீகாரம் வழங்கியது டிராய்
-
Weight Loss Tips in Tamil : இயற்கை முறையில் உடல் எடையை குறைக்கும் 10 எளிய வழிகள்?
-
Reduce Body Heat Foods : இயற்கை முறையில் உடல் சூட்டை குறைக்கும் 10 சிறந்த உணவுகள்..!
-
Diabetes Food Chart in Tamil : சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கிய உணவு பட்டியல்..!
-
Ayilai Fish Benefits in Tamil : அயிலை மீனின் ஆரோக்கிய இரகசியங்கள்..!
-
Pongal 2026 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & முக்கியத்துவமும்..!
-
Jananayakan Legal Issue : 'ஜனநாயகன்’ படத்துக்கு U/A சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவு.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு!
-
Parasakthi Review : சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தின் திரை விமர்சனம்..!
-
Raja Saab Movie Review : பிரபாஸின் ‘தி ராஜா சாப்‘ படத்தின் திரை விமர்சனம்..!
-
WPL 2026 : மகளிர் ஐபிஎல் இன்று தொடக்கம்.. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு மோதல்..!