Vinayagar Chaturthi 2025 : விநாயகர் சதுர்த்தி வரலாறும் கொண்டாட்டமும்
இந்தியாவின் பாரம்பரியத்தில் திருவிழாக்கள் என்றால் மக்களின் சமூக ஒருமைப்பாட்டையும், ஆன்மீகத்தையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கின்றன. இவற்றில் முக்கியமான ஒன்று ‘விநாயகர் சதுர்த்தி’ ஆகும். ‘விநாயகர்’ அல்லது ‘கணேஷா’ என்று அழைக்கப்படும் விநாயகர் மக்களின் வாழ்வில் ஏற்படும் தடைகளை நீக்கும் கடவுள், அறிவின் தெய்வம் என்று (Vinayagar Chaturthi 2025) போற்றப்படுகிறார். நம் வாழ்க்கையில் புதிய தொழில் தொடக்கம் என்றால் முதலில் விநாயகரை வணங்குவது வழக்கமாக கொண்டுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் (ஆகஸ்ட் – செப்டம்பர்) சுக்லபக்ஷ நட்சத்திரத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27-ம் தேதி புதன் கிழமை இந்தியா முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
விநாயகர் சதுர்த்தி வரலாறு
சிவ புராணம், ஸ்கந்த புராணம் போன்ற புராணங்களில் விநாயகர் தோற்றம் பற்றி பல கதைகள் கூறப்பட்டுள்ளது. புராணங்களின் கதையின்படி பார்வதி தேவியால் மஞ்சள் அல்லது மண்ணால் உருவாக்கப்பட்ட சிறுவன் தான் விநாயகர். பார்வதி தேவி குளிக்கும் போது விநாயகரை கதவை காக்க சொன்னார். அப்போது சிவபெருமான் உள்ளே வர முயன்றபோது அதை விநாயகர் தடுக்கிறார், இதனால் கோபமுற்ற சிவபெருமான் விநாயகரின் தலையை வெட்டிவிடுகிறார். பிறகு பார்வதியின் வேண்டுகோளின்படி சிவபெருமான் யானையின் தலையை விநாயகருக்கு பொருத்தி உயிர் கொடுக்கிறார். இவ்வாறே விநாயகர் பிறந்தார் என புராணங்கள் கூறுகிறது.
தடைகளை நீக்கும் தெய்வம் (Vinayagar Chaturthi 2025)
தேவதைகள் தங்கள் பணியை நிறைவேற்றும் போது தடைகள் ஏற்பட்டதாகவும், அதற்காக அவர்கள் விநாயகரை ‘பிரதிஷ்டை’ செய்து வழிபட்டதாகவும் ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் விநாயகரை தடைகளை நீக்கும் தெய்வம் என அழைக்கிறார்கள்.
விநாயகர் சதுர்த்தியின் வரலாற்று ஆதாரங்கள்
இந்திய வரலாற்றில் கி.மு 4-ம் நூற்றாண்டிலேயே விநாயகர் சதுர்த்தி வழிபாடு இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. மேலும் தமிழகத்தை ஆண்ட சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் மற்றும் சாளுக்கியர் காலக் கோவில்களில் (Vinayagar Chaturthi 2025) பெரும்பாலும் விநாயகர் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. மராத்திய மன்னர் ‘சத்ரபதி சிவாஜி’ காலத்திலிருந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும் 1893-ம் ஆண்டு சுதந்திர போராட்டத்தின் போது சுதேசி இயக்கத்தின் தலைவர் ‘பாலகங்காதர திலகர்’ பொதுமக்களை ஒரே அணியில் இணைக்க விநாயகர் சதுர்த்தியை பெருந்திருவிழாவாக கொண்டாட ஆரம்பித்தார். அதன்பின் விநாயகர் சதுர்த்தி சமூக ஒருமைப்பாட்டின் சின்னமாக மாறியது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு அருகம்புல், துருவமூலம், வில்வம், எருக்கம் பூ, போன்றவற்றால் அலங்கரித்து, விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, விளாம்பழம், சுண்டல் போன்ற பிரசாதங்களுடன் 3, 5, 7, 10 நாட்கள் வரை பூஜை செய்து வழிபடுகிறார்கள். மேலும் விநாயகர் சதுர்த்தியின் கடைசி நாள் ‘விநாயகர் விசர்ஜன்’ என இந்நாளில் பக்தர்கள் விநாயகர் சிற்பங்களை ஏரி, குளம், ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் கரைக்கிறார்கள். இதற்கு காரணம் பூமிக்கு வந்த விநாயகரை மீண்டும் அவரது உலகிற்கு திரும்ப செய்வதாகவும் நம்பப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!