Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
இந்தியாவில் தென்னாப்பிரிக்க அணி சுற்றுப் பயணம் (Virat Kohli Latest Record) மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்திய அணி ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆனது ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் 3.12.2025 அன்று நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.
2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி
இந்திய அணி ராய்ப்பூரில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தோல்வியடைந்தது. டாஸை வென்ற தென்னாப்பிரிக்கா அணி ஆனது பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 22 ரன்களும் மற்றும் ரோஹித் சர்மா 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி – ருதுராஜ் ஜோடி பொறுப்பாக விளையாடியது. இந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் ருதுராஜ் இரு வரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். விராட் கோலி 90 பந்துகளில் சதம் அடித்தார். ருதுராஜ் 83 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். இதுவே ருதுராஜின் முதல் சதம் ஆகும். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தபோதிலும் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்கா இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
தென்னாப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்துள்ளது (Virat Kohli Latest Record)
தென்னாப்பிரிக்கா இந்தியாவின் 359 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தி 49.2 ஓவர்களில் 362/6 என்ற கணக்கில் வென்றது. ஐடன் மார்க்ராம் சிறப்பாக விளையாடி 98 பந்துகளில் 110 ரன்கள் எடுத்தார். மேலும் மேத்யூ பிரீட்ஸ்கே 68 ரன்கள் எடுத்து ஐடன் மார்க்ராமுக்கு நல்ல ஆதரவு அளித்தார். இருவரும் இணைந்து தென்னாப்பிரிக்காவை சிறப்பாக வழிநடத்தினர்.
விராட் கோலியின் புதிய வரலாற்று சாதனை
இந்த இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் போட்டியின் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி பெரும் சாதனை படைத்துள்ளார். விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் சதம் அடித்துள்ளார். விராட் கோலி தனது 53வது ஒரு நாள் சதத்தை 90 பந்துகளில் அடித்து அசத்தியுள்ளார். தென்னாப்பிரிக்க ஜாம்பவான்களான ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் தக்க வைத்திருந்த 6 சதம் (தலா 6 சதம்) சாதனையை விராட் கோலி தனது 7-வது சதம் மூலம் முறியடித்தார். இதன் மூலம் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் (7) அடித்த வீரர் விராட் கோலி என்ற புதிய வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.
விராட் கோலியின் தொடரும் சாதனைகள்
இது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி அடித்த 53வது சதம் ஆகும். சர்வதேச கிரிக்கெட் அளவில் அவர் (Virat Kohli Latest Record) அடித்த மொத்த சதங்களின் எண்ணிக்கை ஆனது தற்போது 84 -ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொடர்ந்து 11 முறை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு நாள் போட்டி இன்னிங்ஸ்களில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை விராட் கோலி தன்வசமாக்கியுள்ளார். அதிலும் குறிப்பாக விராட் கோலி 4 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக 7-க்கும் மேற்பட்ட சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்க ஐடன் மார்க்ராம் ஆட்ட நாயகனாக தேர்வு.
ஐடன் மார்க்ராம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், ஐடன் மார்க்ராம் 98 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றுள்ளார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!