Gistak Media

Vishwanath and Sons First Look : சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சூர்யாவின் 46வது படமாக விஸ்வநாத் & சன்ஸ் வெளிவர இருக்கிறது. இப்படம்  உலகம் முழுவதும் (Vishwanath and Sons First Look) பிரம்மாண்டமாக வரும் ஜூலை மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

சமூகவலைதளங்களில் புயலை கிளப்பியுள்ள விஸ்வநாத் & சன்ஸ்ன் ஃபர்ஸ்ட் லுக்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் & சன்ஸ் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆனது சமூக வலைதளங்களில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்தவர்கள் அனைவரும் போஸ்டரில் சூர்யா ஒரு குழந்தையுடன் க்யூட் ஆக போஸ் கொடுத்துள்ளார். மேலும் கூலிங் கிளாஸ் மற்றும் பால் பாட்டில் ஹோல்ட் செய்து சூர்யா ஒரு ஃபேமிலி மேன் லுக் காட்டுகிறார். இது அவரது வழக்கமான மாஸ் போஸ்டர்களுக்கு மாற்றாக சிம்பிளான, மற்றும் பாசிட்டிவ் ஃபீலிங் தரும் போஸ்டராக ரசிகர்கள் பாராட்டுகின்றனர். நடிகர் சூர்யாவின் கண்களில் தெரியும் அதிரடி அமைதியானது அனைவரையும் கவர்ந்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஆனது அவரது ரசிகர்கள் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் தொழில்துறை வட்டாரங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் (Vishwanath and Sons First Look) எளிய போஸ்டர் மட்டுமே வெளியான போதிலும், அது பலதரப்பட்ட ரசிகர்களிடையே பல்வேறு விதமான விவாதங்களை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவின் பல்வேறு பரிமாணங்களில் பவனி வரும் நடிகர் சூர்யா

ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது நடிப்பாற்றலை புதுப்பித்து கொண்டே வரும் பண்பை கொண்டவர் நடிகர் சூர்யா ஆவார். அவர் தமிழ் சினிமாவின் பல்வேறு பரிமாணங்களில் பவனி வருகிறார். அவர் தற்போது சமூக கருத்து கொண்ட கதைகளை தேர்வு செய்வதில் தீவிரமாக உள்ளார். அதனால் இப்படம் ஒரு சமூக-அரசியல் பின்னணியுள்ள குடும்ப கதையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள படக் குழுவினர் (Vishwanath and Sons First Look)

வாத்தி, மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற வெற்றி படங்களை தந்த வெங்கி அட்லூரி இப்படத்தில் சூர்யாடன் இணைந்து அழகான கூட்டணி அமைத்துள்ளார். நாயகிகள் ராதிகா சரத்குமார், மமிதா பைஜு, மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோர் இப்படத்தில் பெண் முன்னணி நட்சந்திரங்களாக பவனி வருகின்றனர். இப்படத்தின் இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டுள்ளார்.

Vishwanath and Sons First Look - Gistakmedia

1980-90 இடையேயான காலகட்ட குடும்பக் கதை என்று தெரிகிறது

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் கதை சுருக்கம் இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கு முன்னர் இயக்குநர் வெங்கி அட்லூரி குடும்ப மையம் கொண்ட, உணர்ச்சிகரமான கதைகளை அடிப்படையாக வைத்து (Vishwanath and Sons First Look) இயக்கி உள்ளார். அந்த வகையில் இந்த விஸ்வநாத் & சன்ஸ் படக் கதையும்,

  • குடும்ப பாச போராட்டங்கள்,
  • தந்தை–மகன்/குடும்ப உறவுகள்,
  • சில சமூக/சூழல் சவால்கள்

ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு மென்மையான குடும்ப கதையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விஸ்வநாத் & சன்ஸ் படம் பற்றி சினிமா தொழில்துறை கணிப்பு

தமிழ் சினிமாவில் குடும்ப-மரபு மையப்படுத்தப்பட்டு எடுக்கப்பட்ட தேவர் மகன் போன்ற படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இந்த தேவர் மகன் படம் ஆனது மரபு-அதிகாரம் மோதலை ஆழமாக கையாண்டு வெற்றி பெற்ற படம் ஆகும். மரபு vs மாற்றம் என்ற தத்துவ மோதலை கையாளப்பட்டிருக்கும் (Vishwanath and Sons First Look) படமாக விஸ்வநாத் & சன்ஸ் படம்  இருக்கலாம் எனவும், மற்றும் இப்படமும் வெற்றி பெறும் எனவும் சினிமா தொழில்துறை கணிப்பு செய்துள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top