Gistak Media

Vivo T5 Pro 5G : பட்ஜெட் விலையில் ‘விவோ டி5 ப்ரோ 5ஜி’ நாளை அறிமுகம்….

இந்தியாவில் ஏப்ரல் 15, 2026 அன்று விவோ T5 Pro 5G (Vivo T5 Pro 5G) ஸ்மார்ட்ஃபோன் அறிமுகமாகிறது. இந்த விவோ T5 Pro 5G ஸ்மார்ட்போன் நடுத்தர விலைப்பிரிவில் ஒரு கேம்-சேஞ்சராக இருக்கும் என நம்பப்படுகிறது.

விவோ T5 Pro 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

சிறந்த பேட்டரி மற்றும் சார்ஜிங்

  • இதன் மிகப்பெரிய சிறப்பம்சம் பிரம்மாண்டமான பேட்டரி மற்றும் சார்ஜிங் திறன் கொண்ட பேட்டரி ஆகும்.
  • இதன் பேட்டரி 9,020mAh திறன் கொண்ட மெகா பேட்டரி ஆகும்.
  • இது இவ்வளவு பெரிய மெகா பேட்டரியை பெற்றுள்ள போதிலும் வெறும் 8.25mm தடிமன் கொண்ட மெல்லிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
  • இது 90W FlashCharge தொழில்நுட்பத்தை ஆதரிக்கின்றது. இந்த போன் 5 ஆண்டுகள் பயன்படுத்திய பிறகும் இதன் பேட்டரி ஆனது 80% செயல்திறனைத் தக்கவைக்கும் திறன் கொண்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது.

சிறந்த வேகம் மற்றும் செயல்திறன் வாய்ந்த செயலி

  • இந்த போன் (Vivo T5 Pro 5G) Qualcomm Snapdragon 7s Gen 4 சிப்செட் மூலம் இயங்குகிறது.
  • இதன் சிறந்த வேகத்தையும் மற்றும் செயல்திறனையும் உறுதி செய்யும் விதத்தில் AnTuTu பெஞ்ச்மார்க் சோதனையில் 1.2 மில்லியன் புள்ளிகளை இந்த போன் பெற்றுள்ளது.
  • இந்த போன் 8GB/12GB RAM கொண்டுள்ளது.
Vivo T5 Pro 5G - GISTAK media

கேமரா சிறப்புக்கள் மற்றும் பேட்டரி லைஃப்

  • இந்த போன் அதன் பின்பக்கத்தில் 50MP Sony IMX882 (OIS) மெயின் கேமராவைப் பெற்றுள்ளது. இது 4K வீடியோ ரெக்கார்டிங் வசதியைக் கொண்டுள்ளது.
  • இந்த போன் அதன் முன்பக்கத்தில் செல்ஃபிக்களுக்காக 32MP கேமராப் பெற்றுள்ளது.
  • வீடியோ ரெக்கார்டிங் மற்றும் செல்ஃபி கேமராகேமிங் திறன்களை மேம்படுத்தும் வகையில் 120FPS கேம்ப்ளே ஆதரவு பெற்றுள்ளது.
  • சிறந்த பேட்டரி லைஃப் பெற்றுள்ளது. 9020mAh பேட்டரி ஆனது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இது பேட்டரி 3 நாட்கள் வரை நீடிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்ப்ளே மற்றும் கேமிங் சிறப்பம்சங்கள்

  • இந்த போன் 6.8 அங்குல 1.5K AMOLED திரை பெற்றுள்ளது.
  • இந்த போன் ஆனது 144Hz புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) மற்றும் கேம்களுக்காக 120fps வேகத்தை நன்றாக ஆதரிக்கின்றது.
  • இந்த போனில் கேமிங்கின் போது ஏற்படும் வெப்பத்தைக் குறைக்க 7,000mm² பரப்பளவு கொண்ட ‘Vapour Chamber’ குளிரூட்டும் அமைப்பு உள்ளது.

நீர் எதிர்ப்பு ரேட்டிங்

  • IP68 ரேட்டிங் & IP69 ரேட்டிங்.

Vivo T5 Pro 5G : ஸ்மார்ட்ஃபோன் விலை விவரங்கள்

  • 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் கொண்ட விவோ T5 Pro 5G ஸ்மார்ட்ஃபோன் Rs. 29,999 – Rs. 30,000 விலைக்கு அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் கொண்ட விவோ T5 Pro 5G ஸ்மார்ட்ஃபோன் Rs. 36,999 – Rs.37,000 விலைக்கு அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

2 thoughts on “Vivo T5 Pro 5G : பட்ஜெட் விலையில் ‘விவோ டி5 ப்ரோ 5ஜி’ நாளை அறிமுகம்….”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top