Gistak Media – Cinema News | Trending News | Latest News

Watermelon Seeds Benefits: தர்பூசணி விதையில் இவ்வளவு நன்மைகளா!!!

தர்பூசணி பழங்களில் சத்துக்கள் நிறைந்திருந்தாலும், அந்த பழங்களில் உள்ள தர்பூசணி விதைகளிலும் (Watermelon Seeds) ஏகப்பட்ட மினரல்கள்  நிறைந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு பழத்தின் விதையின் நன்மைகளைத்தான் இந்த பதிவில் காண இருக்கிறோம்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவர்கள் பத்திய உணவுமுறைகளை கடைபிடிப்பார்கள். அதிலும் பெரும்பான்மையானவர்கள் பழங்களையே அதிகம் சாப்பிடுவார்கள். பழத்தில் உள்ள வைட்டமின்கள், கலோரிகள் உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் தருகிறது. அதிலுள்ள சத்துக்கள்  உடல் ஆரோக்கியமாக இருக்க பெரிதும் உதவுகிறது.

உணவுக்கு பதில் பழங்களை உண்பதால் எளிதில் ஜீரணம் ஆவதுடன் உடலை சுறு சுறுப்பாக வைத்துக் கொள்கிறது. இன்றய தலைமுறையினர் ஆரோக்கிய வாழ்வை வாழ மிகவும் சிரமப் படுகின்றனர். ஒவ்வொரு வயதினரும் ஒவ்வொரு விதமான உடல் பிரட்சனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு காரணம் சத்து குறைபாடுகளே இதனை சரிசெய்ய தான் சத்தான காய்கள், பழங்களை சாப்பிடுகின்றனர்.

தர்பூசணி விதையின் நன்மைகள் (Watermelon Seeds Benefits):

Watermelon Benifits: தர்பூசணி பழம் வெயில் காலங்களில் நாம் அதிகம் உண்ணக்கூடிய குளிர்ச்சியான நீர்த்தன்மை கொண்ட பழம். கோடைக்காலங்களில் உடல் சூட்டை தணிக்க தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடுவார்கள் இதில் அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதை சராகவும் (Watermelon Juice) பருகுவார்கள்.

Watermelon Seeds Benefits: தர்பூசணி பழத்தை சாப்பிடும்போது அதிலுள்ள தர்பூசணி விதைகளை (Watermelon Seeds) நீக்கிவிட்டு சாப்பிடுவார்கள். ஆனால் அந்த தர்பூசணி விதைகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. தர்பூசணி விதையில் (Watermelon Seeds) அதிக அளவில் செரிமான கனிம சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் உடல் எடையை குறைக்க இது பெரிதும் உதவுகிறது.

உடலில் சத்துக்கள் குறைவாக இருப்பவர்கள் தர்பூசணி விதையை (Watermelon Seeds) சாப்பிடும் போது அதிலுள்ள அதிக சத்துக்களை பெற்றுக்கொள்ள முடியும், அதேசமயம் உடல் எடையும் அதிகரிப்பதில்லை. தர்பூசணி விதையில் (Watermelon Seeds) துத்தநாகச் சத்து இருக்கிறது. இது ஆண்களுக்கு தினசரி அத்தியாவசியமான சத்தாக இருக்கிறது. தர்பூசணி விதையை (Watermelon Seeds) சாப்பிடும் போது ஒருநாளுக்கு தேவையான 26% துத்தநாகச் சத்து இதிலிருந்தே கிடைத்துவிடுகிறது.

ஆண்களின் மலட்டு தன்மை பிரச்சனைகளையும் சரி செய்கிறது. தர்பூசணி விதையை (Watermelon Seeds) சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நரம்பு மண்டலம் மற்றும் செரிமான மண்டலம் சரியாக இயங்குகிறது. அதுமட்டுமின்றி தர்பூசணி விதைகள் (Watermelon Seeds) ஊறவைத்த தண்ணீரை குடிக்கும்போது தலை முடி உதிர்வு கட்டுப்படுத்தப்படுகிறது.

தர்பூசணியின் நன்மைகள் (Watermelon Benefits):

கோடைகாலத்தில் ஏற்படும் பல பிரட்சனைகளை தீர்க்த்து உடலில் ஏற்படும் சூட்டை தனித்து நல்ல ஒரு எனர்ஜியை கொடுக்கும் சிறந்த பழம் தர்பூசணி. கோடைகாலம் வந்தாலே அதிகம் விற்கக்கூடிய விலை குறைவான பழம். விலை குறைவாக இருந்தாலும் இந்த பழத்தில் எண்ணற்ற பலன்கள் நிறைந்துள்ளது. தர்பூசணி பழம் நீர்ச்சத்து நிறைந்த பழம், இது வெள்ளேரி வகையை சேர்ந்தது. இதில் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது இந்த இரும்பு சத்தின் அளவை பசலை கீரைக்கு இணையாக சொல்லப்படுகிறது. வைட்டமின் ஏ, சி, பி1,பி6,பொட்டாஷியம் மெக்னிஷியம், போன்ற தாதுஉப்புக்களும் இந்த பழத்தில் நிறைந்துள்ளன. கோடைக்காலங்களில் அதிக அளவில் கிடைக்கக் கூடிய இந்த தர்பூசணியை சாப்பிடுவதால் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைகளுக்கு இது தீர்வாக உள்ளது. உடலுக்கு பல நன்மைகளையும் தருகிறது. 

தர்பூசணியின் 16 நன்மைகள் (Watermelon Benefits in Tamil):

  1. தர்பூசணியில் (Watermelon) 90% அளவுக்கு நீர் அதிகமாக இருக்கிறது. இதை கோடைக்காலத்தில் சாப்பிடும்போது நீரிழப்பு (Dehydration) சொல்லக்கூடிய பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.
  2. தர்பூசணியில் பொட்டாஷியம் அதிக அளவில் இருக்கு. இந்த பழத்துல இருக்க லைகோபீன் என்கிற ஆன்டிஆக்சிடெண்ட் நிறைய இருப்பதால் இது பிரியோடிஸ்கள் உண்டாக்கும் தீமைகளை குறைக்கும். இந்த பழத்தை சாப்பிடுவதால் நம் இதயத்தை இளமையாக வைத்துக்கொள்வது மட்டுமின்றி மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கும், இதய துடிப்பையும் சீராக வைத்துக்கொள்ளும்.
  3. உயர்இரத்த அழுத்தப் பிரட்சனை உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்த பிரட்சனை எளிதில் குறையும்.
  4. அதிகப்படியான உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவைகளால் அவதிப்படுபவர்கள் தர்பூசணியை (Watermelon) சாப்பிடலாம்.ஏனென்றால் இந்த பழமானது உடலில் இருக்கக் கூடிய கொழுப்பை கரைக்கக் கூடியது குறிப்பாக கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மை இந்த தர்பூசணிக்கு உண்டு.
  5. இரத்த ஓட்டத்தை சீராக இயக்கக்கூடியது. அதுமட்டுமில்லாமல் இரத்த ஓட்டத்தை சீராக இயக்கி உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும், மேலும் BP யால் அவதிப்படுபவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் கொடுக்கும். இரத்த நாளங்களில் இருக்கக் கூடிய அழுக்குகளை சுத்தம் செய்யும் பணியையும் தர்பூசணி (Watermelon) செய்கிறது.
  6. மற்ற பழங்களில் இல்லாத பைடோ நியூட்ரியன் என்னும் சத்து இதில் இருப்பதால் இது உடலை ஆரோக்கியமாகவும், சுறு சுறுப்பாகவும் வைத்து கொள்ள உதவுகிறது. இதிலுள்ள மூலப்பொருட்கள் இரத்தம் விழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தரக்கூடியது.
  7. தர்பூசணிக்கு இன்னொரு பெயரும் உண்டு. இயற்கை வயாகரா! ஏன் இது இயற்கை வயாகரா என்று சொல்லப்படுகிறது என்றால். (Power House) என்று சொல்லக்கூடிய சிட்ருலின் என்னும் அறிய வகைப் புரதச்சத்து தர்பூசணியில் அதிக அளவில் இருப்பதுதான் இதற்கு காரணம். இந்த சிட்ருலின் இரத்த நாளங்களை விரிவடைவது மட்டுமின்றி இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.
  8. தர்பூசணியை (Watermelon) சாப்பிட்டவுடன் அதிலுள்ள சிட்ருலின் வேதியல் மாற்றம் அடைந்து அர்ஜிநைன் என்னும் ஒரு வகை வேதியப்பொருளாக நம் உடலில் மாறுகிறது. இருதயத்தையும், இரத்த ஓட்ட சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது. இந்த பழம் சிறந்த ஒரு ஊக்குவிக்கியாகவும் செயல்படுகிறது. ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான பிரச்சனைகளையும் சரி செய்கிறது. தர்பூசணியில் சிவப்பு பகுதிக்கு கீழ் உள்ள வெள்ளை பகுதியில் தான் சத்துக்கள் நிறைந்துள்ளது.
  9. லைகோபின் என்னும் சத்தானது சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் சருமத்தை பாதிக்காமல் இருக்க பாதுகாக்கிறது.
  10. உடல் சூட்டை குறைப்பது மட்டுமின்றி மனதை அமைதிப்படுத்தும் தன்மை இந்த பழத்திற்கு உண்டு. அதுமட்டுமில்லாமல் இதில் நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் இருப்பதால் இது பசியை தாங்கக்கூடிய பழமாக இருக்கிறது. வயிற்று வலி மற்றும் அடி வயிற்று வலி பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.
  11. இதிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக காயங்களை எளிதில் சரிசெய்து குணப்படுத்தும் ஆற்றல் இந்த பழத்திற்கு உண்டு.
  12. தர்பூசணி (Watermelon) புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதிலுள்ள லைகோபின் மார்பு, நுரையீரல், கர்பப்பை, பெருங்குடல் போன்ற இடங்களில் எல்லாம் ஏற்படும் புற்றுநோயை தடுக்க உதவுகிறது.
  13. இதிலுள்ள விட்டமின் சி, பீட்டா கரோடின், லூடின் சத்துக்கள் மாலைக்கண் நோய், கண்விழி மிகை அழுத்த நோய் போன்ற நோய்களை சரிசெய்கிறது.
  14. மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு இந்த பழம் மிகச்சிறந்த மருந்து. இதிலுள்ள நீர் மற்றும் நார்ச்சத்து இந்த பிரச்சனைகளை சரி செய்கிறது. ஆனால் அதிகமாக உட்கொள்ளும்போது வயிற்றுபோக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உண்டு.
  15. இதிலுள்ள பீடா கரோட்டின், விட்டமின் ஏ வாக மாறி நம் முடிக்கும், சருமத்திற்கும் நிறைய நன்மைகளை தருகிறது. இதில் பேக்டீரியா தொற்று, அலர்ஜிக்கு எதிரான தம்மை இருப்பதால் இந்த பழத்தின் தோலிலுள்ள சதைப்பகுதியை சருமத்தில் தடவலாம், அவ்வாறு தடவும்போது முகத்தில் உள்ள பருக்களை சரிசெய்கிறது.
  16. ஆஸ்துமா வர முக்கிய காரணம் விட்டமின் சி குறைபாடு, தர்பூசணியில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Slideshows

Scroll to Top