Gistak Media – Cinema News | Trending News | Latest News

Weight Gain Foods In Tamil: உடல் எடை அதிகரிப்பதற்கான உணவு முறைகள்

நோஞ்சான் போல பார்க்க ரொம்ப ஒல்லியா இருக்கியே என்று சொல்லும் பாட்டிமார்கள் இன்றும் பல வீடுகளில் உள்ளனர். அதே சமயம் உடல் பருமனாக இருந்தாலும் பார்த்த உடனே ஊளைச்சதை உடம்பு என்று சுட்டிக் காட்டவும் தயங்க மாட்டார்கள். அப்பா அம்மா இருக்கும் வரை, வளரும் குழந்தைகள் தேவையற்ற கொழுப்பு உணவையோ, ஆரோக்கியமற்ற உணவையோ பார்ப்பதில்லை.

Weight Gain Foods In Tamil: உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க பாரம்பரிய உணவு வகைகளுக்குப் பதிலாக இரண்டு பிரட் துண்டுகளை சாப்பிடும் இளைஞர்கள் இப்போது நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். இவர்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி இங்கு பார்க்கப் போகிறோம். இவை உங்கள் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும் என்பதால், குண்டாகிவிடுவோமோ என்று பயப்படத் தேவையில்லை. அப்படிப்பட்ட உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.

உடல் எடை அதிகரிப்பதற்கான உணவு முறைகள் (Weight Gain Foods In Tamil)

1.எள்ளு பலகாரங்கள்

  • Weight Gain Foods In Tamil: எள்ளு உடல் எடையை அதிகரிக்கக் கூடியவை .
  • எள்ளுச்சட்னி, எள்ளு சேர்ந்த நொறுக்கு தீனி, எள்ளு துவையல் ஆகியவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தினமும் ஒரு எள் உருண்டை சாப்பிடுவதும் பலம் தரும். மேலும் இதை தயாரிப்பதும் மிகவும் எளிது தான்.
  • ஒரு கப் எள்ளுடன் 2 கப் வெல்லம் சேர்க்கவும். இதில் கருப்பு எள்ளாக இருந்தால் சிறந்தது. கசப்பாக இருந்தாலும் பலன் தரும்.
  • எள்ளை வறுத்த பொன்னிறமாக இருக்கும் போது எடுத்து மிக்ஸியில் சுழற்றி இறக்கவும்.
  • அதனுடன் வெல்லத்தை அரைத்து, இரண்டு ஏலக்காயை சேர்த்து, சுற்றி நெய் கலந்து உருண்டையாக பிடிக்கவும்.
  • சுவையும் நல்லா இருக்கும், ஆனால் கடைகளில் விற்கும் எள்ளு உருண்டைகளை வாங்கும் போது பார்த்து வாங்குங்கள். இது முழு பலனளிக்காத சர்க்கரையில் செய்யப்பட்டிருக்கலாம்.

2.உளுந்து பலகாரங்கள்

  • Weight Gain Foods In Tamil: உளுந்து என்றதும் வெள்ளை உளுந்து உங்களது கவனத்தை திசை திருப்ப வேண்டாம்.
  • கருப்பு உளுந்தை வாணலில் வறுத்து வாசனை போனதும் போனதும் இவற்றை அரைத்து கொள்ளவேண்டும்.
  • 1 கப் உளுந்துக்கு 1 நல்லெண்ணெய் மற்றும் 2 கப் பனங்கருப்பட்டி சேர்த்து களி போல கிண்ட வேண்டும்.
  • பனங்காருப்பட்டி பாகு செய்து இதில் அரைத்த உளுந்து மாவை சேர்த்து அவ்வப்போது நல்லெண்ணை சேர்த்து கிண்ட வேண்டும்.
  • இது ஒட்டாமல் அல்வா வந்ததும் இறக்கி உருண்டை பிடிக்கவும்.
  • கருப்பு உளுந்து என்பதால்  சுவை அதிகமாக இருக்கும்.
  • பெண்களுக்கு இடுப்பு மற்றும் கருப்பைக்கு பலம் தருவதுடன், உடல் பருமனை உண்டாக்கும்.
  • வாளிப்பான உடல் என்று சொல்லப்படுவதற்கு ஏற்றவாறு உடலை மாற்றும்.

3.பசு நெய்

  • Weight Gain Foods In Tamil: சுத்தமான பசு நெய்யாக இருப்பது அவசியம். வீட்டில் நெய் செய்தால் இன்னும் சிறப்பு.
  • பசுநெய்யானது உடல் அதிகரிக்கக்கூடிய உணவாகும்.
  • இதற்காக நெய்யை அதிகமாக சேர்க்க வேண்டும் என்பதில்லை.
  • தினமும் மதிய உணவின் போது ஒரு கைப்பிடி சூடான சாதத்தில் 2 தேக்கரண்டி நெய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
  • நெய் ஆரோக்கியமான எடை அதிகரிப்பை ஊக்குவிக்கிறது.

4.கேழ்வரகு பலகாரங்கள்

  • Weight Gain Foods In Tamil: கேழ்வரகு ஒரு சத்தான தானியம் மட்டுமல்ல, உடலுக்கு ஊட்டமளிக்கும் தானியமாகும்.
  • கேழ்வரகு தோசை, கேழ்வரகு புட்டு, கேழ்வரகு அட போன்றவற்றை பிடிக்காதவர்கள் கேழ்வரகு லட்டை செய்து சாப்பிடலாம்.
  • கேழ்வரகு மாவை புட்டு போல் அவித்து 1 கப் மாவுக்கு 2 கப் வெல்லம், 1 கப் வேர்கடலை சேர்த்து கொழுக்கட்டை போல் செய்து உருண்டையாக கொடுக்கலாம்.
  • கேழ்வரகு மாவை வெல்லம் சேர்த்து பிசைய வேண்டும்.
  • வேர்க்கடலையை அரைத்து உருண்டையாக்கி சாப்பிடலாம்.

5.பாசிப்பருப்பு

  • Weight Gain Foods In Tamil: பயறு வகைகளில் மிகவும் நன்மை பயக்கும் ஒன்றாக பாசிப்பருப்பு உள்ளது.
  • பாசிப்பயிறை வாசனை போக வறுத்து மிஷினில் நைசாக அரைக்கவும்.
  • இவற்றை ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். நாட்டுச்சர்க்கரையை மிக்ஸியில் அரைக்கவும்.
  • உலர்ந்த கொட்டைகள், உலர்ந்த பழங்களை இறுதியாக நறுக்கவும்.
  • நெய்யை சூடாக்கி பாசிப்பருப்பு மாவில் கலந்து உருண்டை பிடித்து வைத்துக்கொள்ளவும்.
  • இவற்றை தினமும் ஒரு உருண்டை எடுத்துக்கொள்ளலாம். மேலும் உணவு இடைவேளையில் செவ்வாழை சாப்பிடுவதால் உடல் எடையை அதிகரிக்க உதவும்.

மேலே சொன்னவை அனைத்துமே சிற்றுண்டிகளே. இவை உடலின் குடல் இயக்கக் குறைபாடுகளை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்க உதவுவதால், மலச்சிக்கல் ஏற்படாது. இதில் உள்ள சத்துக்கள் உடல் முழுவதும் உறிஞ்சப்படுவதால், உடல்  எடை அதிகரிப்பு ஆரோக்கியமாக இருக்கும். இந்த பாரம்பரிய உணவுகள் உடலுக்கு பலம் கொடுக்க வல்லது. சாப்பிடும் போது நீங்களே உணர்வீர்கள்.

(Weight Gain Foods In Tamil)

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top