ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான உடல் எடையை அடைவதும் மற்றும் பராமரிப்பதும் மிகவும் முக்கியம் ஆகும். இது ஒரு கடினமான (Weight Loss Tips in Tamil) பணி ஆகும். இந்த பின்வரும் உதவிக்குறிப்புகளைப் பின்பற்றி எளிமையாகவும் நெகிழ்வாகவும் எடை இழப்பு இலக்குகளை அடையலாம்.
அதிகப்படியான உணவுகளைத் தவிர்த்தல்
உடலின் பசி அறிந்து அதிகப்படியான உணவுகளைத் தவிர்த்து தேவையான அளவில் உண்ணும் பழக்கத்தை மேற்கொள்வது சாலைச் சிறந்ததாகும்.நொறுங்கத் தின்றால் 100 வயது என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு சுவையையும் அனுபவித்து, கவனத்துடன் அளவோடு சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது டிவி பார்ப்பது மற்றும் தொலைபேசி கேட்பது தவிர்த்தல் மிகவும் நல்லது ஆகும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உண்ணுதல்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் எடை இழப்புக்கு ஒரு சிறந்த தேர்வாகும். இவற்றின் கலோரி அளவுகள் குறைவு. இவற்றில் நிறைந்துள்ள நார்ச்சத்து நிறைவான உணர்வை தரும். ஒவ்வொரு முறை உண்ணும் உணவுத் தட்டில் பாதியை பழங்கள் மற்றும் காய்கறிகளால் நிரப்ப முயற்சிக்கவும்.
புரதம் அதிகம் உள்ள உணவுகளைப் பயன்படுத்துதல்
புரதம் அதிகம் உள்ள உணவுகள் வயிறு நிரம்பிய உணர்வை எளிதில் அதிகரிக்கும் மற்றும் பசியைக் குறைக்கும். புரதம் அதிகம் உள்ள உணவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் கலோரி கட்டுப்பாடு எளிதாகும் (Weight Loss Tips in Tamil) மற்றும் எடை விரைவாகக் குறையும். பருப்பு வகைகள் (பருப்பு, பீன்ஸ்) விதைகள் மற்றும் கொட்டைகள், முட்டைகள், மீன், கோழி மற்றும் பால் பொருட்கள் (பாலாடைக்கட்டி, கிரேக்க தயிர்) ஆகியவை புரதம் அதிகம் உள்ள உணவுகள் ஆகும்.
பல முறை தண்ணீர் குடித்தல்
அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க பல முறை தண்ணீர் குடிப்பது சிறந்ததாகும். ஒவ்வொரு முறை உணவு அருந்துவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க முயற்சி செய்ய வேண்டும். இது பசியைக் குறைக்க உதவும், அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க உதவும் மற்றும் விரைவாக வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து குறைந்த கலோரிகளை உட்கொள்ள வைக்கும். மொத்தத்தில் பல வழிகளில் தண்ணீர் குடிப்பது எடையைக் குறைக்க உதவும்.
சர்க்கரை,கார்போஹைட்ரேட்டுகள் அதிகமுள்ள உணவுகளை தவிர்த்தல்
சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகள் உடல் எடையை விரைவில் அதிகரிக்கும். மேலும், பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தேவையான அளவில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகள் உண்ணும் பழக்கத்தை மேற்கொள்வது சாலைச் சிறந்ததாகும். மேலும், எடை கூடுதலைக் குறைக்க உதவும்.
எளிய நடைபயிற்சி,யோகா போன்ற செயல்பாடுகளை மேற்கொள்தல்
உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது சிறந்த எடை இழப்பை ஏற்படுத்தும். நடைபயிற்சி, யோகா அல்லது நடனம் போன்ற எளிய உடல் செயல்பாடுகள் நல்ல மாற்றத்தை தரும். தினசரி நடைபயிற்சி சாலச் (Weight Loss Tips in Tamil) சிறந்ததாகும். லிஃப்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளில் ஏறுவது சிறந்ததாகும்.
போதுமான தூக்கத்தை கடைப்பிடித்தல்
போதுமான தூக்கமின்மை பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களைப் பாதிக்கும். இது பசியை அதிகமாக்கி அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கிறது. மேலும், எடை இழப்பை கடினமாக்கும். நம் உடல் கார்டிசோல் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது, இது பசியையும் கொழுப்பு சேமிப்பையும் அதிகரிக்கிறது.
கிரீன் டீ அருந்துதல்
கிரீன் டீ உடல் எடையைக் குறைக்க உதவும் நம்பமுடியாத திறனைக் கொண்டுள்ளது. கிரீன் டீ அருந்துதல் கொழுப்பை மிக அதிக சதவீதத்தில் எரிக்க உதவுகிறது. இது குறுகிய காலத்தில் எடையைக் குறைக்க உதவும்.
நன்றாக மென்று சாப்பிட வேண்டும்
ஆயுர்வேதம் உணவை சரியாக மென்று சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. இது சிறந்த செரிமான செயல்முறைக்கு உதவும் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களை (Weight Loss Tips in Tamil) அதிக அளவில் உறிஞ்சுவதற்கும் உதவும். இது உண்ணும் உணவை குறைத்து எடையை குறைக்க உதவும்.
இடைப்பட்ட உண்ணாவிரதத்தை மேற்கொள்தல்
இது எடையைக் குறைப்பதற்கான ஒரு இயற்கையான பயனுள்ள வழியாகும். இது கொழுப்பை எரிக்க மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். வாரத்திற்கு ஒரு முறை மற்றும் இரண்டு முறை முழு நாள் உண்ணாவிரதம் மேற்கொள்வது மிகவும் நல்லது.