ஜிம்முக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே (Weight Loss Without Gym) முறையான உணவு முறை, தொடர்ச்சியான முயற்சி, மற்றும் தரமான உடற்பயிற்சி முறைகளைப் பின்பற்றி உடல் எடையை குறைக்கலாம். இவையே உடல் எடையை குறைக்க போதுமானது.
அன்றாட வாழ்க்கைமுறையில் தேவைப்படும் மாற்றங்கள்
● தினமும் இரவு 7-8 மணி நேர ஆழ்ந்த தூக்கத்தை கடைப்பிடித்தல்
தினமும் இரவு காலம் தாழ்த்தி தூங்குவதை தவிர்த்து 10 மணிக்குள் தூங்கி, காலை 5 மணிக்கு எழும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். 7 முதல் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் ஆனது (Weight Loss Without Gym) உடல் எடையைக் குறைக்க மிகவும் தேவைப்படுகிறது.
● தினமும் இரவு 7-8 மணி நேர ஆழ்ந்த தூக்கத்தை கடைப்பிடித்தல்
தினமும் உணவு உண்ட பிறகு 15-20 நிமிடங்கள் மெதுவான நடைப்பயிற்சியை மேற்கொள்தல் உடலின் செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
● தினசரி தியானப்பயிற்சியை மேற்கொள்தல்
மனித உடலில் ஏற்படும் அளவுக்கு அதிகமான மன அழுத்தமானது உடல் எடையைக் கூட்டும். இது போன்ற மன அழுத்தம் அதிகமாக வராமல் தவிர்க்க தினசரி சுதர்சன கிரியா அல்லது தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்வது மிகவும் நல்லது.
Weight Loss Without Gym : உணவு முறையில் தேவைப்படும் மாற்றங்கள்
உடல் எடையைக் கூட்டுவதில் தவறான உணவு முறையே முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான உணவு முறையை மேற்கொள்வதன் மூலம் 80 சதவீகித உடல் எடையைக் குறைக்கலாம்.
● உணவு உட்கொள்வதற்கு முன் தண்ணீர் குடித்தல்
ஒவ்வொரு முறையும் உணவு உட்கொள்வதற்கு முன் தண்ணீர் குடித்தல் ஆனது வயிறு நிறைந்த உணர்வைத் தரும். மேலும் இது அதிக அளவில் உணவு உட்கொள்வதை தடுக்கும். மதியம் அல்லது இரவு உணவிற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது மிகவும் சிறந்தது. ஒரு நாள் முழுவதும் 2-3 லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கும் வழக்கமானது நல்ல வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.
● அதிக அளவில் காய்கறிகள் உட்கொள்தல்
சாப்பிடும் உணவில் பாதியளவு காய்கறிகள் சேர்த்து உணவு உட்கொள்தல் மிகவும் நல்லது. காய்கறிகளில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து ஆனது நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் இது அதிக அளவில் உணவு உட்கொள்வதை தடுக்கும்.
● புரதச்சத்து (Protein) உணவு உட்கொள்தல்
காலை, மதியம், மற்றும் இரவு என மூன்று வேளை உண்ணும் உணவிலும் புரதம் இருப்பது மிகவும் நல்லது. புரதம் சிறந்த முறையில் பசியைக் கட்டுப்படுத்த உதவும்.
● சாப்பிடும் முறையில் உண்ணும் உணவின் அளவைக் குறைத்தல்
தேவையான அளவு காய்கறிகள் மற்றும் புரத உணவுகளை முதலில் சாப்பிட்டுவிட்டு இறுதியாகச் சாதம் (கார்போஹைட்ரேட்) சாப்பிடும் பழக்கத்தை மேற்கொள்தல். இது அதிக அளவில் சாதம் (கார்போஹைட்ரேட்) சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்கும். மேலும் உடல் எடையைக் குறைக்க உதவும்.
● பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்த்தல்
அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுகளான கேக், மில்க் ஷேக், பீட்சா, மற்றும் பர்கர் போன்ற உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்த்தல் நல்லது.
● கவனத்துடன் உணவு உட்கொள்தல்
(Weight Loss Without Gym) ஒவ்வொரு முறையும் உணவு உட்கொள்ளும் போது டிவி அல்லது செல்போன் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இது அதிக அளவில் உணவு உட்கொள்வதை தடுக்கும். மேலும் உண்ணும் உணவை நன்றாக மென்று சுவைத்து மற்றும் ரசித்துச் சாப்பிட வேண்டும்.
● குறைந்த அளவில் உணவு டெலிவரி ஆப்களை பயன்படுத்துதல்
உணவு டெலிவரி ஆப்கள் மூலம் அடிக்கடி ஆர்டர் செய்து சாப்பிடுவதைத் தவிர்த்து குறைந்த அளவில் உணவு டெலிவரி ஆப்களை பயன்படுத்த வேண்டும்.
ஜிம்முக்கு இணையான வீட்டு வேலைகளை மேற்கொள்தல்
அன்றாட வீட்டு வேலைகளை மேற்கொள்வதன் மூலம் ஜிம்முக்கு இணையான பலனை பெறலாம். வீட்டு வேலைகளே கலோரிகளை எரிக்க உதவும். உடற்பயிற்சி செய்வதற்கு தனியாக நேரம் ஒதுக்க தேவை இல்லை.
● தினசரி வீட்டு தரையைத் துடைத்தல்
தினசரி வீட்டு தரையைத் துடைத்தல் கை, தோள் மற்றும் வயிற்று தசைகளுக்கு நல்ல வேலை தருகிறது. தினசரி 30 நிமிடங்கள் தரையைத் துடைப்பதன் மூலம் சுமார் 150-200 கலோரிகளை எரிக்க முடியும்.
● தினசரி துணி துவைத்தல்
தினசரி 30 நிமிடங்கள் துணி துவைப்பதின் மூலம் 100-150 கலோரிகள் வரை குறையும். மேலும் துணி வாளியைத் தூக்குவது, துணிகளைக் காயப்போடுவது போன்ற அசைவுகள் மிகவும் நல்லது.
● சமையலறையில் உதவுதல்
(Weight Loss Without Gym) சமையலறையில் காய்கறிகளை வெட்டுவது, கிளறுவது மற்றும் சமையலறையில் நடப்பது மிகவும் நல்லது. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 120-170 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
● தோட்ட வேலைகள் செய்தல்
தோட்டத்தில் உள்ள செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, தோண்டுவது மற்றும் தொட்டிகளைத் தூக்குவது மிகவும் நல்லது. இதன் மூலம் 30 நிமிடங்களில் 200-300 கலோரிகள் வரை எரிக்க முடியும்.
● பொருட்களை ஒழுங்காக பராமரித்தல்
அலமாரிகளில் உள்ள பொருட்களை ஒழுங்காக அடுக்குவது மற்றும் படுக்கையைச் சரிசெய்வது போன்ற வேலைகள் மிகவும் நல்லது. இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 150-200 கலோரிகள் வரை குறைக்கலாம்.