Whatsapp Status Updates : வாட்ஸ்அப்பில் Reshare அறிமுகம்
நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் தொடர்பாக தற்போது புதிய அப்டேட் வந்துள்ளது. அதாவது வாட்ஸ்அப்பில் ஒருவர் வைத்திருக்கும் ஸ்டேட்டஸ் நமக்கு பிடித்து இருந்தால் அதனை நாம் அவர்களிடம் கேட்டு பெற்று நமது ஸ்டேட்டஸாக (Whatsapp Status Updates) வைப்போம். இனி அப்படி செய்ய தேவையில்லை. ஒருவரின் ஸ்டேட்டஸ் நமக்கு பிடித்திருந்தால் அதனை நேரடியாகவே நமது ஸ்டேட்டஸாக வாட்ஸ்அப் மட்டுமின்றி பேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து கொள்ளலாம். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்டேட்டஸ் Reshare அறிமுகம்
இதற்கு முன்னர் ஒருவர் தனது வாட்ஸ்அப்பில் ஒரு பாடலை ஸ்டேட்டஸாக வைக்கிறார் அந்த பாடல் நமக்கும் பிடித்திருக்கிறது. அந்த பாடலை நாமும் ஸ்டேடாஸாக வைக்க வேண்டும் என்று நினைத்தால் சம்பந்தப்பட்டவரிடம் அந்த பாடலை அனுப்பும்படி கேட்டு பெறுவோம். இல்லையென்றால் ஸ்டேட்டஸ் சேவர் போன்ற செயலிகள் மூலமாக அதனை டவுன்லோடு செய்து நம் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாக வைத்து கொள்வோம். இனி அப்படி செய்ய வேண்டிய தேவை இல்லை. ஒருவரின் ஸ்டேட்டஸ் பிடித்திருந்தால் அதனை நேரடியாக நம் ஸ்டேட்டஸாக அப்டேட் செய்யலாம். இதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் ‘Reshare’ என்ற ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்டேட் வெர்ஷன் 2.25.27.18 என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக சொல்லவேண்டுமென்றால் எக்ஸ் பக்கத்தில் ஒருவரின் பதிவை ரீட்வீட் (retweet) செய்வது போல் இந்த அம்சம் போல் செயல்படும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Reshare ஆன் செய்வது எப்படி? (Whatsapp Status Updates)
தற்போது நாம் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தால் அதன் அடிப்பகுதியில் Reply என்ற ஆப்ஷனுடன் நண்பர்கள், உறவினர்கள் லைக் செய்ய வசதியாக ஹார்ட் சிம்பள் இருக்கும். இதில் கூடுதலாக (Whatsapp Status Updates) தற்போது Reshare ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனை நாம் ஆன் செய்து வைத்தால் போதும் நம் ஸ்டேட்டஸை இன்னொருவர் எளிதாக Reshare பண்ண முடியும். இந்த ஆப்ஷனை நாம் மேனுவல்லாக தான் ஆன் செய்ய வேண்டும். உதாரணமாக கேலரியில் இருந்து வீடியோவை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாக வைக்க கொண்டு செல்லும்போது அதன் அடிப்பகுதியில் Status (contacts) என்று தோன்றும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!