-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
எந்த உணவோடு எந்த உணவு (Foods) சாப்பிடக் கூடாது தெரியுமா?
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது அனைவருக்கும் தெரிந்த பழமொழி அதேபோல்தான் நாம் சாப்பிடும் உணவானது (Foods) அளவுக்கு மீறி அதிகமாக சாப்பிட்டால் அதுவே நமக்கு தீங்காக மாறிவிடும். சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவை (Foods) எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் நாம் எந்த அளவிற்கு நிறைய கவனம் செலுத்துகிறோமோ. அதே அளவிற்கு நாம் சாப்பிடும் உணவுகளும் (Foods) எந்த உணவோடு சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு உணவிலும் (Foods) ஒவ்வொரு விதமான தன்மை கொண்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வெவ்வேறு தன்மை கொண்ட சத்துக்கள் நிறைந்த உணவை ஒரே சமயத்தில் உண்ணும்போது தேவையற்ற உடல் உபாதைகள் நம் உடலில் ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. இதனால் எந்த உணவோடு எந்த உணவை சேர்த்து சாப்பிட வேண்டும், சாப்பிடக்கூடாது என்பதை அறிந்திருத்தல் அவசியம். எனவே இணையாத உணவுகள் என்ன என்பதை அறிந்திருத்தல் நமக்கு நல்லது. எந்த உணவோடு எந்த உணவு இணையக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
எந்த உணவோடு எந்த உணவு (Foods) சாப்பிடக் கூடாது
- பாலுடன் மீன் சேர்த்து சாப்பிடக்கூடாது ஏனென்றால் மீனில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின், தாதுஉப்புக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கிறது. முக்கியமாக கண் பாதிப்பு, இதய நோய், ஆஸ்துமா இதுமாதிரியான பிரச்சனைகளை தவிர்க்க மீன் ஒரு சிறந்த மருந்தாக செயல் படுகிறது. இவ்வளவு சத்துக்கள் நிறைத்திருக்கும் மீனை பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி சாப்பிட்டால் உடலில் உள்ள இரத்தம் கெட்டுவிடும் அதுமட்டுமின்றி நம் உடலில் உள்ள நுண்ணிய பாதைகள் அடைக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டமும் பாதிப்படையும்.
- அடுத்து வாழைப்பழம், பாலுடன் வாழைப்பழத்தையும் சேர்த்து சாப்பிட கூடாது ஒருசிலர் வாழைப்பழத்துடன் பாலை சேர்த்து சாப்பிடுவார்கள் அவ்வாறு சாப்பிட்டால் உடலில் சளி அதிகரிக்க நிறைய வாய்ப்புள்ளது. இதனால் பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதே போல் தர்பூசணி சாப்பிட்ட பின் பாலை குடிக்க கூடாது. ஏனெனில் அவ்வாறு சாப்பிட்டால் அது வாயு தொல்லையை ஏற்படுத்தும்.
- பால், முட்டை இவை இரண்டிலும் புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது அப்படி சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
- கீரைகளில் செல்லுலோசஸ் அதிகமாகவே உள்ளதால் செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் அது மட்டுமின்றி கீரையில் டானின் இருப்பதால் இதை பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது அப்படி சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
- தயிருடன் வறுத்த உணவுகளான (Fried Foods) மீன், கருவாடு போன்றவைகளை சாப்பிடக்கூடாது, அவ்வாறு சாப்பிட்டால் உடம்பில் வெண்மேக நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
- நிறைய மக்கள் பால் கலந்த ஓட்ஸ் சாப்பிடுவார்கள் அப்படி சாப்பிடும்போது அதில் சிலர் அதனுடன் ஆரேஞ்சு சாறு (Orange Juice) சேர்த்துக் குடிப்பார்கள். அப்படி குடிக்கக் கூடாது. ஏனெனில் ஓட்ஸில் ஸ்டார்ச் இருப்பதால், இது செரிக்கச் செய்கிற நொதிகளை ஆரேஞ்சில் இருக்கிற சிட்ரிக் அமிலம் அழித்துவிடும் ஆரேஞ்சில் அமிலம் இருப்பதால் இது பாலை திரிய வைப்பது மட்டுமின்றி உடலில் சளியின் தேக்கத்தையும் அதிகரிக்கும்.
- பால் குளிர்ச்சியான பொருள் என்பதால் இதனுடன் முள்ளங்கியை சேர்த்து சாப்பிடக்கூடாது. இப்படி சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
- பழங்களை தனியாக சாப்பிட்டோம் என்றால் அது சீக்கிரம் செரிமானம் ஆகிவிடும். அவ்வாறு சாப்பிடுவதே நல்லது. ஆனால் அப்படி சாப்பிடாமல் பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் அதனால் அசிடிட்டி பிரச்சனைகள் ஏற்படக்கூடும் எனவே இந்த இரண்டு பொருளையுமே சேர்த்து சாப்பிடக் கூடாது.
- தேனில் அதிக மருத்துவ பயன்கள் உள்ளது. இந்த தேனை சிலர் சூடு படுத்தி பயன்படுத்துவார்கள் இப்படி சூடு செய்வதால் இதிலுள்ள இயற்கை தன்மை அழிந்துவிடும் அதையே பயன்படுத்தினால் உடலில் நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளது. அதேசமயம் தேனையும், நெய்யையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் நம் உடலில் தேவையில்லாத கழிவுகள் ஒன்றாக சேர்ந்து பலவிதமான உபாதைகளுக்கு வழிவகுக்கும்.
- ஃபுருட் சாலட் போன்றவைகளை சாப்பிடும்போது இனிப்பு மற்றும் புளிப்பான பழங்களை சேர்த்து சாப்பிடக்கூடாது. அப்படி இரண்டு சுவைக்கொண்ட பழங்களை சாப்பிட்டால் நம் உடலில் பித்தம், கபத்தின் அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. பழங்களை பொறுத்தவரையில் தனியாகத்தான் சாப்பிட வேண்டும். மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது அப்படி சாப்பிட்டால் அதிலுள்ள சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்காது. குறிப்பாக பழங்களை சாப்பிடும் போது அதனுடன் வறுத்த உருளைக்கிழங்கு சிப்ஸ், சீஸ், மாவு வகை உணவு (Foods) போன்றவைகளை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் செரிமான கோளாறுகள் ஏற்படும்.
- வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்த பழம் பப்பாளி. இந்த பழம் பார்வை குறைபாடு, மாதவிடாய் பிரச்சனைகள், முக பொலிவு இந்த மாதிரியான பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது. பப்பாளியை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது. அப்படி குடித்தால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
- மதுவுடன் அகத்தி கீரையை சாப்பிடக்கூடாது. மது அருந்துபவர்கள் கவனம் இன்றி அகத்தி கீரையை சாப்பிட்டால் இந்த இரண்டு எதிர்வினை உணவுகளும் (Foods) ஒன்று சேர்ந்து உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.
- வெண்ணெயுடன், காய்களை சேர்த்து உண்ணக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் ஜீரணம் ஆவதில் பிரச்சனைகள் ஏற்படும்.
- உளுந்துடன் முள்ளங்கியை சேர்த்து சாப்பிடக்கூடாது. அவ்வாறு சேர்த்து சாப்பிட்டால் அந்த உணவானது உடலுக்கு விஷமாக மாறிவிடுகிறது.
- அசைவ உணவுகள் (Non Veg Foods) சாப்பிட்டவுடன் கூலிடிரிங்க் குடிக்கக் கூடாது. இயல்பாகவே அசைவ உணவுகளை உண்ணும்போது அது செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் இதனால் உடலில் உள்ள எனர்ஜியையும் அதிகம் எடுக்கும் இவ்வாறு இருக்கும்போது நாம் கூலிடிரிங்க்சை குடித்தால் அதிலுள்ள சர்க்கரை சாப்பிட்ட அசைவ உணவை சரியாக ஜீரணிக்காது, ரொம்பவும் குளிர்ச்சியாக குடிக்கும்போது உணவில் இருக்கக் கூடிய கொழுப்பை உறைய வைக்கும் இதனால் தொப்பை வரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு.








