Whistle Podu : மாஸ் காட்டிய விசில் போடு பாடல்
நடிகர் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படத்தின் Whistle Podu பாடல் வெளியாகி ஒரே நாளில் அதிக பார்வையாளர்களைக் கொண்டு சாதனை படைத்துள்ளது. ‘தி கோட்’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, விடிவி கணேஷ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். உளவுத்துறை பற்றிய படமாக இருப்பதால், மேக்கிங்கில் மிரட்டும் வகையில் தயாராகி வருகிறது. அவ்வப்போது போஸ்டர்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வந்தது ஏஜிஎஸ் நிறுவனம்.
சாதனை படைத்த Whistle Podu :
இந்நிலையில், படத்தின் முதல் பாடலான Whistle Podu பாடலை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டது. மதன் கார்க்கியின் வரிகளில் இந்த பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். இந்தப் பாடலின் வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இந்த பாடல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில், பாடல் வரிகள் அடங்கிய வீடியோ காட்சிகள், விஜய், பிரபுதேவா, பிரசாந்த் என மூவரும் டான்ஸ் ஆடுவது அட்டகாசமான காட்சி என கூறி வருகின்றனர். இந்நிலையில் Whistle Podu பாடல் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
அதன்படி தென்னிந்திய சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை கடந்த பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது. Whistle Podu பாடல் சுமார் 25.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்கு முன், 2022 ஆம் ஆண்டு விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் 23.77 மில்லியன் பார்வைகளுடன் இதுநாள் வரை முதலிடத்தில் இருந்தது. Whistle Podu அதை பின்னுக்கு தள்ளியுள்ளது. மேலும் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்ற தம் மசாலா பாடல் 17.42 மில்லியன் பார்வைகளுடன் 3வது இடத்தில் உள்ளது. விஜய்யின் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் 16.68 மில்லியன் பார்வைகளுடன் 4வது இடத்திலும், லியோவின் நான் ரெடி பாடல் 16.54 மில்லியன் பார்வைகளுடன் 5வது இடத்திலும் உள்ளன. இதனால் தென்னிந்திய சினிமாவின் ராஜாவாக விஜய் மாறிவிட்டார் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!