White Pumpkin Juice Benefits In Tamil : வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
நாம் எல்லோரும் நினைப்பதுபோல் வெள்ளை பூசணிக்காய் கண் திருஷ்டியை விரட்டும் சாதாரண காய் அல்ல. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், (White Pumpkin Juice Benefits In Tamil) மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. மேலும் 90 சதவீதம் நீர்ச்சத்து கொண்ட இந்த வெள்ளை பூசணிக்காயில் வைட்டமின்கள், இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் என உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இத்தனை சத்துக்கள் நிறைந்துள்ள இந்த வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளை பூசணிக்காய் (White Pumpkin Juice Benefits In Tamil)
உடல் நச்சுக்களை வெளியேற்றும்
வெள்ளை பூசணிக்காய் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்ற காயாகும். நீங்கள் தொடர்ந்து 30 நாட்கள் காலை வெறும் வயிற்றில் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வழியாக வெளியேறும். இதன் மூலம் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்பட்டு சிறுநீரக பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
தேவையான நீர்ச்சத்து கிடைக்கும்
பொதுவாக நம் அனைவருக்கும் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். இதன் விளைவாக உடல் சோர்வு, தலைசுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகும். இதற்கு சிறந்த தீர்வு வெள்ளை பூசணிக்காயாகும். ஏனெனில் வெள்ளை பூசணிக்காயில் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால் உடலின் நீரேற்றத்திற்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வெள்ளை பூசணிக்காய் ஜூஸை குறிப்பிட்ட இடைவேளையில் நீங்கள் தவறாமல் குடித்து வந்தால் பருவ கால நோய்கள் உங்களை நெருங்காது. ஏனெனில் வெள்ளை பூசணியில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சியை ஊக்குவித்து, உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
உடல் எடையை கட்டுப்படுத்தும்
வெள்ளை பூசணியில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு இந்த வெள்ளை பூசணி ஜூஸ் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் கலோரி குறைவாக உள்ளதால் நீங்கள் அதிகமாக சாப்பிடுவது (உண்ணுவது) கட்டுப்படுத்தப்பட்டு, உடல் எடை அதிகரிக்காது. மேலும் உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புபவர்கள் காலை அல்லது மாலை நடைப்பயிற்சி முடித்த பிறகு இந்த வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பது நல்லது.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் வெள்ளை பூசணிக்காயில் இருக்கும் சேர்மங்கள் நம் உணவின் மூலம் கிடைக்கும் கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை மெதுவாக்கி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக கூறுகிறது. எனவே நீங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்கள் மருத்துவரின் பரிந்துரையுடன் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் குடிக்கலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!