Who Won Today's IPL Match: ஐ.பி.எல் தொடரை வெல்லப்போவது யார்?…
16 வது ஐ.பி.எல் திருவிழாவானது திருவிழாவானது இன்று முதல் தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளன. முதலாவதாக குஜராத் டைட்டன்ஸ் அணியும் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாட உள்ளன. ஐ.பி.எல் தொடருக்காக வீரர்கள் அனைவரும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஐ.பி.எல் தொடரானது 2008 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஐ.பி.எல் தொடரானது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அணியிலும் உள்ள வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்படுகின்றனர். பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரே அணியில் இணைந்து விளையாடுவதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கும் பிரபலங்கள்:-
இந்நிலையில் IPL 2023 தொடக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட நடிகைகள் தமன்னா பாட்டியா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பிரபல பாலிவுட் பாடகர் அர்ஜித் சிங் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் பாலிவுட் பிரபலங்களான கத்ரீனா கைப், டைகர் ஷெராப் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்பியன் பட்டம் பெற்ற அணிகள்:-
இதுவரை 15 ஐ.பி. எல் தொடர் நடந்துள்ளது. அதிக முறை சாம்பியனாக மும்பை இந்தியன்ஸ் 5 முறை பட்டம் பெற்றுள்ளது. இதனையடுத்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ஒரு முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. தற்போது நடக்கும் ஐ.பி.எல் தொடரில் கோப்பையை வெல்லப்போவது யார்? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிபெறும் அணிகளுக்கான பரிசு தொகை:-
கடந்த ஆண்டை போலவே கோப்பையை வெல்லும் அணிக்கு ரூபாய். 20 கோடியும், இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூபாய்.13 கோடியும், தகுதி சுற்றில் தோல்வியடையும் அணிக்கு ரூபாய். 7 கோடியும் மற்றும் வெளியேறுதல் சுற்றில் தோல்வியடையும் அணிக்கு ரூபாய். 6 1/2 கோடி ஆகியவை பரிசு தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இன்று இரவு நடைபெறும் ஐ.பி.எல் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதற்கான டிஜிட்டல் உரிமைத்தை ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் ஐ.பி.எல் தொடரை ஜியோ சினிமாவில் இலவசமாக பார்ப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது.








