Gistak Media – Cinema News | Trending News | Latest News

With Love Review : பழைய காதலைத் தேடும் பயணமா? ‘வித் லவ்’ திரை விமர்சனம்.!

அபிஷன் ஜீவிந்தின் “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய மதன் என்பவர் “வித் லவ்” படத்தின் இயக்குநராக (With Love Review) அறிமுகமாகி உள்ளார். இத்திரைப்படம் இன்றைய இளைஞர்களின் மனநிலையையும், மற்றும் காலத்தால் அழியாத முதல் காதல் நினைவுகளையும் உட்கருவாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. 

மதன் இயக்கத்தில் "வித் லவ்" திரைப்படம்

இந்த உணர்ச்சி பூர்வமான காதல் காவிய கதையில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். துணை கதாபாத்திரங்களில் சரவணன், கவ்யா ஆனில், சச்சின் நச்சியப்பன் ஆகியோர் நடித்துள்ளனர். காமெடி கதாபாத்திரங்களில் ராஜ் ஆனந்தி மற்றும் தெனி முருகன் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டு அழகு சேர்த்துள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

நவீன உணர்வுகளுடன் பழைய காதல் நினைவுகளை கிளறும் காவியம்

இந்தப் படத்தின் கதை வழக்கமான காதல் கதைகளில் இருந்து வேறுபடுகிறது. காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட கதாநாயகி தனது பழைய காதலைத் தேடி நண்பனுடன் சேர்ந்து பயணிக்கிறார். அவர்கள் தங்கள் கடந்த கால நினைவுகளை நினைவுகூர்ந்து அலசுகின்றனர். பழைய காதலர்களை தேடும் பயணத்தில் சுயமதிப்பு, ஏமாற்றம், மற்றும் உண்மையான நட்பு ஆகியவற்றின் தாக்கத்தை சிறப்பாக (With Love Review) ஆராய்கிறது. நட்பின் ஆறுதலில் அன்பின் ஆழத்தை காட்டுகிறது. இளைஞர்கள் காதல் தோல்விக்காக வாழ்க்கையின் முடிவுக்கு செல்லாமல் அடுத்த காதலைத் தேட வேண்டும் என்பதை இப்படத்தின் கதை வலியுறுத்துகிறது.

With Love Review - Gistakmedia

"வித் லவ்" திரைப்படத்தின் பலம் (With Love Review)

அனஸ்வரா ராஜன் மற்றும் அபிஷன் ஜீவிந்த் கதாபாத்திரமாகவே மாறி வாழ்ந்துள்ளனர். இவர்களது நடிப்பு படத்தின் முக்கிய பலமாகக் கருதப்படுகிறது. மிகவும் பாராட்டை பெற்றுள்ளது. காமெடி காட்சிகளில் ராஜ் ஆனந்தி மற்றும் தெனி முருகன் நல்ல கலகலப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஷான் ரோல்டனின் இசை இப்படத்தின் உணர்ச்சிகளை உயிரோட்டமாக வெளிப்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது.

'வித் லவ்' படம் பெற்றுள்ள விமர்சனங்கள்

  • இப்படம் காதல் கதையை விரும்புவர்களுக்கு ஒரு சிறந்த பொழுது போக்காக அமையும். ஒரு நல்ல அனுபவத்தை வழங்கும்.
  • இத்திரைப்படத்தின் உணர்ச்சிபூர்வமான கதை, நடிப்பு, ஒளிப்பதிவு மற்றும் இசை ஆகியவை பாராட்டப்படும் விதத்தில் அமைந்துள்ளது.
  • இத்திரைப்படம், நவீன காலத்து இளைஞர்களின் நட்பு, ஆறுதல், மற்றும் நிஜ அன்பை அழகாக செதுக்கி உள்ளது.
  • இத்திரைப்படம் பெரிய சம்பவங்களை விட, சின்னஞ்சிறு நெருக்கமான தருணங்களை அழகாக வெளிப்படுத்தியுள்ளது.
  • தேவையற்ற ஆபாசம் அல்லது வன்முறைகள் கலக்காமல் தூய்மையான பாராட்டத்தக்க விதத்தில் சொல்லப்பட்ட காதல் காவியம்.

 

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top