வீட்டுக்குள் மட்டும் ஒரு காலத்தில் வாழ்ந்து வந்த பெண்கள் தற்போது எல்லா துறைகளிலும் (Women’s Day 2026) முன்னேறுகிறார்கள். இந்த சர்வதேச மகளிர் தினம் என்பது,
- பெண்களின் சம உரிமைகளை நினைவூட்டும் நாள்
- பெண்களின் வியத்தகு சாதனைகளை பாராட்டும் நாள்
- பாலின சமத்துவமான உலகத்தை உருவாக்கும் அழைப்புகள்
பெண்களின் உரிமைக்குரல்களை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் முழு திறனை அடையக்கூடிய ஒரு உலகத்தை நாம் உருவாக்க முடியும். பெண்களை உள்ளடக்கிய சமூகங்களை ஆதரிப்பதன் மூலமும் மற்றும் வளர்ப்பதன் மூலமும், அனைத்து பெண்களும் சிறுமிகளும் சிறப்பாக செயல்பட வைக்க முடியும்.
சர்வதேச மகளிர் தினம் வரலாறு
சர்வதேச மகளிர் தினம் ஆனது 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இந்த நாள் பெண்களின் உரிமை போராட்டங்களில் இருந்து உருவான நாள் ஆகும். பெண்கள் பெருமளவில் வாக்குரிமை, வேலை உரிமை, சம்பள உரிமை, மற்றும் கல்வி பயில உரிமை ஆகியவற்றுக்காக (Women’s Day 2026) பேரணிகளில் கலந்து கொண்டனர். முதல் முறையாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடிய ஆண்டு 1911 ஆகும். United Nations அதிகாரப்பூர்வமாக 1975-ஆம் ஆண்டு அங்கீகரித்தது.
சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம் (Women's Day 2026)
உலகம் முழுவதும் பெண்களின் உரிமைகள் பற்றி பேச ஒரு நாள் வேண்டும் என்ற கோரிக்கையே பின் வரும் நாட்களில் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடும் நாளாக மாறியது. ஆண்டுதோறும் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பெண்களின் உரிமைகளை நினைவூட்டும் நாள் ஆகும். முக்கியமாக இது ஒரு விழிப்புணர்வு நாளாக பார்க்கப்படுகிறது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை கொண்டாடும் உலகளாவிய நாளாக கொண்டாடப்படுகிறது. இது பாலின சமத்துவத்தை முன்னிறுத்தும் அழைப்பாகவும் விளங்குகிறது.
உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் கொண்டாட்டங்கள்
பெண்களின் பேரணிகள்
பெண்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணிகள் ஆனது நடத்தப்படுகின்றன.
சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சாதனை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள்
சிறந்த சாதனை செய்த பெண்களை ஊக்குவிக்கும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சமூக ஊடக பகிர்வுகள்
உலகளவில் பெண்களின் சாதனைகள் எல்லாம் பகிரப்படுகின்றன.
உலகம் முழுவதும் பெண்கள் இன்றளவும் சந்திக்கும் பிரச்சினைகள்
- வேலை இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள்.
- பாலின சம்பள வேறுபாடுகள்.
- பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகள்.
- கல்வி பயில்வதில் உள்ள தடைகள்.
2026 ஆண்டின் சர்வதேச மகளிர் தின அதிகாரப்பூர்வ கருப்பொருள்
ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை (Theme) மையமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபை மகளிர் தினத்தை முன்னெடுக்கிறது. இது பெண்களுக்கு அதிகாரமளித்தலை வலியுறுத்துகிறது. இந்த 2026 ஆண்டின் சர்வதேச மகளிர் தின அதிகாரப்பூர்வ கருப்பொருள் “Give to Gain” (முன்னேற்றத்திற்காக ஆதரவு அளி) ஆகும். ஒரு சமூகமாக (Women’s Day 2026) முழுவதும் பயனடைய பெண்கள் மற்றும் சிறுமிகளின் வளர்ச்சிக்காக அறிவுப் பகிர்வு, வழிகாட்டல், வாய்ப்புகள் மற்றும் ஆதரவு அளிக்க வேண்டும்.
எதிர்காலத்தில் பெண்களின் பங்கு
எதிர்காலத்தில் அடுத்து வரும் தலைமுறைகளில் பெண்கள் விண்வெளி ஆராய்ச்சி, அரசியல், Artificial Intelligence மற்றும் உலக வணிகம் எனப் பல துறைகளில் முன்னிலை வகிப்பார்கள்.
அனைவரும் ஆதரிக்க வேண்டும்
பாலின சமத்துவத்திற்கான போராட்டம் இன்றளவும் முடிவடையவில்லை. இது முடிவடைய (Women’s Day 2026) தொடர்ச்சியான முயற்சிகள், மற்றும் கூட்டு நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. அனைவருக்கும் கல்வி வேண்டும் என்ற பாலின சமத்துவத்தை ஆதரிக்கும் அமைப்புகள் பெருக வேண்டும்.
ஒரு பெண் முன்னேறினால் ஒரு குடும்பம் முன்னேறும், ஒவ்வொரு குடும்பமும் முன்னேறினால் ஒரு சமூகம் முன்னேறும், ஒவ்வொரு சமூகமும் முன்னேறினால் ஒரு நாடே முன்னேறும். பெண்கள் சம உரிமைகள், வாய்ப்புகள் மற்றும் மரியாதையை அனுபவிக்கும் எதிர்காலத்தை நோக்கி நாம் ஒன்றாக முன்னேற துரிதப்படுத்த வேண்டும்.