Gistak Media

Women's World Cup 2025 : மகளிர் உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி..!

இந்தியாவில் Women’s World Cup 2025 கோலாகலமாக கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நவி மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நேற்று (30.10.2025) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரணி ஆக இந்திய அணி களமிறங்கியது.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி ஆனது லிட்ச்ஃபீல்டின் அபார சதம், எல்லிஸ் பெர்ரி மற்றும் கார்ட்னரின் அரைசதங்களால் 338 ரன்களை பெற்றது. ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த லிட்ச்ஃபீல்டின் 119 ரன்களும் மற்றும் எலிஸ் பெர்ரியின் 77 ரன்களும் எடுத்திருந்தனர். 

இந்திய மகளிர் அணியின் அதிரடி ஆட்டம் (Women's World Cup 2025)

மிகவும் கடினமான சூழ்நிலையில் இந்திய அணி களமிறங்கியது. ஆட்டத்  தொடக்கத்தில் சொற்ப ரன்களில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். கேப்டன் ஹர்மன் ப்ரீத் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேநேரம்  தீப்தி, ரிச்சா மற்றும் அம்ன்ஜோத் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தொடர்ந்து அதிரடியாக ஆடி 127 ரன்களை குவித்தார். இவர் 134 பந்துகளில் 127 ரன்களை எடுத்துள்ளார். இந்த ஆட்டத்தை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது ‘நம்பிக்கை மற்றும் பொறுமையின் பரிசு’ என வர்ணித்துள்ளார்.  

இந்திய அணி 48.3 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணிக்கு இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இது ஆழ்ந்த நம்பிக்கைக்கான வெகுமதியாக (Women’s World Cup 2025) அமைந்தது. அது மட்டுமல்லாமல் பல அரிய சாதனைகளையும் இந்திய அணி படைத்துள்ளது.

Women's World Cup 2025 - Gistakmedia

1. வரலாற்றில் மகளிர் ஒருநாள் போட்டியில் இதுவே அதிகபட்ச வெற்றிகரமான சேஸிங்காகும். 

2. ஆண்கள் அல்லது பெண்கள் பங்கு பெறும் ஒருநாள் உலகக் கோப்பை நாக் அவுட்டில் ஒரு அணி ஆனது 300 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைத் சேஸ் செய்வது இதுவே முதல் முறை ஆகும். 

3. இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் எடுக்கப்பட்ட 679 ரன்கள் இதுவரை இல்லாத அதிகபட்ச score ஆகும். இதற்கு முன்பு இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் (2017 உலகக் கோப்பை,பிரிஸ்டல்) எடுக்கப்பட்ட ரன்கள் 678 ஆகும்.

4. 22 வயது ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மகளிர் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் சதம் அடித்த முதல் இளைய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். 

5. ஆஸ்திரேலிய அணி வரிசையாக 15 முறை தொடர்ந்து வெற்றிகளை பெற்று வந்த நிலையில் இந்த முறை முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடம் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை மறுநாள் (Nov. 2-ல்) இந்திய அணி ஆனது தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top