Women's World Cup Final : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி மகுடம் சூடியது இந்திய அணி..!
இந்திய மகளிர் அணிக்கு 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது (Women’s World Cup Final) இறுதி சுற்றில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது. இதுவரை 34 முறை இந்திய மகளிர் அணியும் தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மோதி உள்ளன. இதில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 13 முறையும், இந்திய மகளிர் அணி 20 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மழை காரணமாக ஒரு போட்டி ரத்தானது. 2005, 2017 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட இந்திய மகளிர் அணி இந்த முறை வெற்றியை பெற்றது. இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளைத் தொடர்ந்து இந்திய அணி மகளிர் உலகக்கோப்பையை வென்ற அணியாக அமைந்துள்ளது. மகளிர் உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை கோப்பையை வெல்லாத அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையேயான இறுதிச்சுற்று (Women's World Cup Final)
இந்திய அணி மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான இறுதிச்சுற்று பலப்பரீட்சை நவம்பர் 2 அன்று நவி மும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, லாரா வால்வார்ட் தலைமையிலான தென் ஆப்ரிக்கா அணியை எதிர்த்து விளையாடியது. டாஸை வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியின் காகா 3 விக்கெட்டுகளை பெற்றார்.
பின்னர் தென் ஆப்பிரிக்கா இலக்கை நோக்கி விளையாடினாலும், தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளையும் ஷெஃபாலி வெர்மா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 45.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய மகளிர் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று (Women’s World Cup Final) கோப்பையை உயர்த்தி சாதனை படைத்தது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!