Gistak Media

Women's World Cup : மகளிர் உலகக் கோப்பை.. முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி..!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (Women’s World Cup) செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கி, நவம்பர் 2 வரை நடைபெறவுள்ளன. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளன. ஒவ்வோர் அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். மேலும் பாகிஸ்தான் மகளிர் அணி, இந்தியாவுக்கு விளையாட வராது என்பதால் அந்த அணிக்குரிய அனைத்து போட்டிகளும் இலங்கையில் விளையாடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளதால் உள்நாட்டில் நடைபெறும் முதற்கட்ட லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விலை, வெறும் ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா Vs இலங்கை பலப்பரீட்சை

மகளிர் உலகக் கோப்பை அட்டவணையின்படி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீராங்கனை மந்தனா 8 ரன்னில் ஆட்டமிழந்து (Women’s World Cup) அதிர்ச்சியளித்தார். 10 ஓவர்கள் முடிந்த நிலையில், ஆட்டத்தின் இடையில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 47 ஓவருக்கு  மாற்றப்பட்டது. மழைக்கு பிறகு பொறுப்புடன் விளையாடிய பிரதிகா 37 ரன்னிலும், ஹர்லீன் தியோல் 48 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவரை தொடர்ந்து வந்த ஜெமீமா ரோட்ரிகஸ் 0 ரன்னிலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 21, ரிச்சா கோஷ் 2 ரன் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், பின்னர் தீப்தி சர்மா மற்றும் அமன்ஜோத் கவுர் ஜோடி சேர்ந்து 99 பந்துகளில் 103 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தபோது அமன்ஜோத் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். 47 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் குவித்தது.

இலங்கை அணிக்கு 270 ரன்கள் இலக்கு (Women's World Cup)

Women's World Cup - Gistakmedia

தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் கேப்டன் சாமரி 43 ரன்னிலும், நிலாக்ஷி டி சில்வா 35 ரன்னிலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய ஹர்ஷிதா சமரவிக்ரம 29 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி 45.4 ஓவரில் 211 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 59 ரன் வித்தியாசத்தில் (Women’s World Cup) இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், ஸ்நேகா ரானா மற்றும் சாரனி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top