World Highest Railway Bridge : உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
செனாப் ரயில் பாலம் காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான (World Highest Railway Bridge) ரயில் பாலமாகும். இந்த செனாப் ரயில் பாலம், உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் வழித்தடத் திட்டத்தின் 42 ஆண்டுகால பணிகளின் வெற்றியைக் காட்டுகிறது.
செனாப் ரயில் பாலம்
1997-ல் தொடங்கிய இந்த ரயில் பாலப்பணி 1,400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. கொங்கண் ரயில்வே கார்ப்பரேஷன் மேற்பார்வையில் இந்த ரயில் பாலம் உருவாக்கப் பட்டுள்ளது. IIT டெல்லி, மற்றும் ரூர்கி தங்களின் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளன. மேலும் பின்லாந்து மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன. இது ஒரு எஃகு வளைவு மற்றும் கான்கிரீட் அமைப்பிலான பலமாகும்.
செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள் (World Highest Railway Bridge)
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது மொத்தம் 272 கிலோ மீட்டர் தொலைவில் பக்கால் மற்றும் கெளரி இடையே இந்த ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. செனாப் நதிக்கரை மேல் இந்த ரயில் பாலம் 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. உலக புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தைவிட இந்த செனாப் ரயில் பாலம் 35 மீட்டர் உயரமாகும்.
இந்த செனாப் ரயில் பாலம் ஆனது கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையேயான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் நல்ல இணைப்பை தரும். இந்தப் பாலத்தில் ரயில்கள் மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் செயல்பட முடியும். இந்தப் பாலத்திற்காக மொத்தமாக 28,660 மெட்ரிக் டன் எஃகு மற்றும் டெக்லா எனும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாலம் 120 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடியதாக 26 கிலோ மீட்டர் நீளமுள்ள போக்குவரத்துக்கான சாலைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பூகம்ப அபாய பகுதியான மண்டலமான ஐந்தில் அமைந்துள்ள இந்த ரயில் பாலம் 8 ரிக்டர் அளவுகோல் வரையிலான பூகம்பங்களை தாங்கும் திறனும் மற்றும் 40 டன் டிஎன்டி வெடிப்புகளை தாங்கும் சக்தியும் கொண்டது. இந்தியாவின் சிவில் இன்ஜினியரிங் துறையில் இது ஒரு அற்புதமாகக் கருதப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!