World's 4th Largest Economic In India : உலகின் 4வது மிக பெரிய பொருளாதார நாடக மாறியது இந்தியா
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது சற்று சரிவடைந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக சிறப்பான வளர்ச்சியை எட்டி வருகிறது. இந்நிலையில் உலகப் பொருளாதார தரவரிசையில் (World’s 4th Largest Economic In India) இந்தியா, ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4வது மிக பெரிய பொருளாதார நாடக மாறியுள்ளது. மேலும், இதே நிலையில் வளர்ச்சி தொடர்ந்தால் விரைவில் இந்தியா உலகின் 3வது மிக பெரிய பொருளாதார நாடாக மாற வாய்ப்புள்ளதாக நிதி ஆயோக்கின் சுப்ரணியம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
கடந்த 1991-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை மூலமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தாராளமயமாக்கல் கொள்கையின் மூலம் இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
4வது பொருளாதார நாடு இந்தியா (World's 4th Largest Economic In India)
ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் சக்தி வாய்ந்த பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியான பி.வி.ஆர்.சுப்ரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4 டிரில்லியன் டாலர்களாக (அமெரிக்க மதிப்பில்) உயர்ந்துள்ள நிலையில், அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனிக்கு பிறகு 4வது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விரைவில் 3வது இடம்
இது தொடர்பாக மேலும் பேசிய அவர் ‘தற்போது பொருளாதாரத்தில் அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் மட்டுமே நம்மை விட முன்னிலையில் உள்ளன. நாம் இதே வேகத்தில் பயணித்தால் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 3வது மிக பெரிய பொருளாதாரமாக மாற முடியும்’ எனவும் (World’s 4th Largest Economic In India) அவர் குறிப்பிட்டார். மேலும் தற்போது சர்வதேச புவிசார் சூழல் வேகமாக மாறி வருவதால், உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்கள் சீனாவுக்கு பதிலாக இந்தியாவில் உற்பத்தி மையத்தை தேடுகின்றனர். இதன் காரணமாகத்தான் இந்தியா பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!