-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
இந்தியாவின் வெற்றிகரமான தொழில்முனைவோர் - WOW MOMO CEO Sagar Daryani
WOW MOMO CEO Sagar Daryani :
சாகர் தர்யானி மற்றும் பினோத் குமார் ஹோமாகாய் ஆகியோர் தங்கள் படிப்பை கொல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியரில் முடித்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஒரு கேரேஜில் உணவு நிறுவனம் ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் முதல் சமையலறை 200 சதுர அடி அறை ஆகும். உள்ளூர் மளிகைக் கடையில் இருந்து மூலப்பொருள்களை சாகர் தர்யானி (WOW MOMO CEO Sagar Daryani) மற்றும் பினோத் குமார் ஆகியோர் கடனாக பெற்று உணவு நிறுவனம் நடத்தினர். அவர்கள் பெயரளவு சம்பளத்தில் இரண்டு பகுதி நேர சமையல்காரர்களை பணிக்கு அமர்த்தி உணவு நிறுவனம் நடத்தினர். ஒரு குறிப்பிட்ட அட்டவணையை தயாரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தினர். ஆரம்ப நாட்களில் சாகர் தர்யானியும் பினோத் குமாரும் WOW MOMO என்ற T Shirt அணிந்து Spenzor Store-ருக்குள் நுழையும் ஒவ்வொரு நபரையும் அணுகி, அவர்களிடம் Sample MOMO-ஸை Taste செய்யச் சொன்னார்கள்.
அதன் பிறகு சாகர் தர்யானி (WOW MOMO CEO Sagar Daryani) மற்றும் பினோத் குமார் ஆகியோர் தெற்கு கொல்கத்தாவில் உள்ள கச்தலா டோலிகஞ்சில் உள்ள ஸ்பென்சர்ஸ் ரீடெய்ல் மற்றும் கொல்கத்தாவில் உள்ள பிக்பஜார் ஹைப்பர் மார்க்கெட்களில் உள்ள கியோஸ்க்களின் ஆரம்பக் கடைகளைப் பயன்படுத்தினர். அவர்கள் இருவரும் 18% வருவாய் பங்கில் ஒரு மாத வாடகை செலுத்தி வந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் மால்கள் மற்றும் தொழில்நுட்ப பூங்காக்கள் போன்ற வணிக இடங்களில் உணவு விற்பனை நிலையங்களை தொடங்கினர். Rs.30,000 முதலுடன் 2008-ல் ஸ்பிரிங்டேல் ஸ்பென்சரில் துரித உணவு உணவகத்தை தொடங்கினர். பின்பு அவர்கள் நகரம் முழுவதும் உள்ள பல்வேறு வணிக இடங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், மால்கள் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்களில் இதே போன்ற கியோஸ்க்களைத் திறந்தனர்.
2010 ஆம் ஆண்டு சாகர் தர்யானி (WOW MOMO CEO Sagar Daryani) மற்றும் பினோத் குமார் ஹோமாகாய் ஆகியோர் கொல்கத்தாவில் உள்ள Salt Lake-க்கில் உள்ள செக்டார் V இல் ரூ.14 லட்சம் முதலீட்டில் தங்களுடைய முதல் சுதந்திர விற்பனை நிலையத்தைத் திறந்தனர். 2011 இல் பெங்களூருவில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் முதல் கிளையை திறந்தனர். இந்தியாவில் தற்போது 13 நகரங்களில் 200 விற்பனை நிலையங்களை WOW MOMO திறந்துள்ளது (கொல்கத்தா, நொய்டா, குர்கான், மும்பை, சென்னை, லக்னோ, டெல்லி, பெங்களூரு, கட்டாக், பூரி, கொச்சி, புவனேஸ்வர் மற்றும் கான்பூர்). மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் WOW MOMO-வின் தலைமையகம் உள்ளது. தரப்படுத்தப்பட்ட செய்முறை மற்றும் சிறந்த சமையல் முறை ஆனது குழுவினரால் பின்பற்றப்படுகிறது. அவர்கள் சைவ உணவு உண்பவர்களுக்கு மற்றும் அசைவ உணவு உண்பவர்களுக்கு என 16 வகையான MOMO-க்களை தயார் செய்கிறார்கள் (சைவ உணவு உண்பவர்களுக்கு சோளம் மற்றும் மற்றும் சீஸ், மற்றவற்றுடன், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு சிக்கன் மற்றும் சீஸ், சிக்கன் மற்றும் இறால்). அவர்கள் சாக்லேட் MOMO-ஸையும் தயார் செய்கிறார்கள்.
இந்த நிறுவனத்தில் 900 பேர் கடை முகப்புகளை நிர்வகிப்பவர்கள் (Storefronts) மற்றும் 700-க்கும் மேற்பட்ட பின்தள உற்பத்தியாளர்கள் (Backend Production People) பணிபுரிகின்றனர். WOW MOMO நிறுவனத்தின் நிகர மதிப்பு ₹860 கோடி ஆகும். 2013 ஆம் ஆண்டுக்கான ‘சிறந்த SME விருதையும், சிறந்த உணவு மற்றும் விவசாயப் பொருட்கள்’ விருதையும் WOW MOMO வென்றுள்ளது. இப்போது இந்த 2024-ஆம் ஆண்டில் WOW MOMO துரித உணவு உணவக சங்கிலி டெல்லி NCR, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் வேகமாக விரிவடைய திட்டமிட்டுள்ளது. WOW MOMO-ன் USP ஆனது Pan-Fried Momos மற்றும் சுவையான MOMO-க்களை வழங்குவது ஆகும்.
Latest Slideshows
-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!