Gistak Media – Cinema News | Trending News | Latest News

WPL 2026 : மகளிர் ஐபிஎல் இன்று தொடக்கம்.. முதல் போட்டியில் மும்பை – பெங்களூரு மோதல்..!

அண்மைக் காலங்களில் மகளிர் கிரிக்கெட்டும் ஆடவர் கிரிக்கெட்டுக்கு நிகராக சிறப்பாக வளர்ந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது மகளிர் அணி விளையாடும் கிரிக்கெட் போட்டியையும் அதிகளவில் பார்த்து வருகின்றனர். இன்று நவி​மும்​பை​யிலுள்ள டி.ஒய்​.​பாட்​டீல் மைதானத்​தில் மும்பை இந்​தி​யன்ஸ் மற்​றும் ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு (WPL 2026) அணி​கள் மோதுகின்​றன.

மகளிருக்காக டபிள்யூ.பி.எல். 2023-ல் உருவானது

பிசிசிஐ கடந்த 2023-ம் ஆண்டு இந்​தி​யா​வில் மகளிர் ஐ.பி.எல் என்று அழைக்கப்படும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்) போட்டியை அறிமுகம் செய்தது. இது ஆடரு​வருக்​கான ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரைப் போலவே மகளிருக்​காக உரு​வாக்​கப்​பட்​ட பிரீமியர் லீக் தொடர் ஆகும். பல ஆண்டு கோரிக்கையாக மகளிர் பிரிமியர் லீக் தொடர் உரு​வாக்​கப்​பட்​டது.

மகளிர் பிரிமீயர் லீக் டி20-ன் 3வது சீசன் (WPL 2026)

மும்பை அணி இந்த தொடரின் முதல் சீசனை வென்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2வது சீசனில் பெங்களூரு அணி கோப்பையை வென்றது. தற்போது இந்த டபிள்யூ.பி.எல் தொடரின் 3வது சீசன் இன்று (09.01.2026) தொடங்கி உள்ளது. தற்போது இந்த தொடரில் மும்பை இந்​தி​யன்​ஸ், ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு, குஜ​ராத் ஜெயன்ட்​ஸ், யுபி வாரியர்​ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய (WPL 2026) ஐந்து அணிகள் விளையாடுகிறது. இந்த தொடரின்  போட்டிகள் அனைத்தும் மும்பையில் உள்ள டி ஓய் பட்டேல் மைதானத்திலும் மற்றும் பிராபோர்ன் மைதானத்திலும் மட்டுமே நடைபெற உள்ளது. இன்று நவி​மும்​பை​யிலுள்ள டி.ஒய்​.​பாட்​டீல் மைதானத்​தில் மும்பை இந்​தி​யன்ஸ் மற்​றும் ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி​கள் மோதுகின்​றன.

ஒவ்வொரு அணியும் 5 வெளிநாட்டு வீராங்கனைகளை பயன்படுத்தலாம்

மகளிர் பிரீமியர் லீக் தொடர் ஆனது ஆடவர் ஐபிஎல் போல் இல்லாமல் சற்று வேறுபடுகிறது. இந்த பிரீமியர் லீக் தொடரில் ஒவ்வொரு மகளிர் அணியும் ஐந்து வெளிநாட்டு வீராங்கனைகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அந்த ஐவரில் ஒருவர் வெளிநாட்டு வீராங்கனை அசோசியேட் நேசன் என்று அழைக்கப்படும் நாட்டைச் சேர்ந்த வீராங்கனையாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

WPL 2026 - Gistakmedia

இந்த தொடர் நடைபெற உள்ள விதம்

இந்த தொடர் பிப்​ர​வரி 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் முதல் 11 ஆட்​டங்​கள் மும்​பை​யிலும் மற்றும் அடுத்த 11 ஆட்​டங்​கள் வதோத​ரா​விலும் என மொத்தம் 22 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதில் முதல் இடம் பிடிக்கும் அணி ஆனது நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகள் எல்லாம் எலிமினேட்டர் போட்டிகளில் மோதும். அந்த எலிமினேட்டர் (WPL 2026) போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் அதன் பிறகு நடைபெறுகின்ற இறுதிப் போட்டிக்களுக்கு செல்வார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச அனுமதி

இந்த தொடரின் போட்டிககளை மைதானத்தில் நேரில் காண வருகின்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள்  ரூபாய் 100 கட்டணம் செலுத்தி தங்களது அனுமதி டிக்கெட்டுகளை பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒளிப்பரப்பு விவரங்கள்

இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புபட உள்ளது. ஆங்கிலத்தில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலிலும் மற்றும் தமிழில் கலர்ஸ் தமிழ் சேனலிலும் ஒளிப்பரப்புபடும். ஓடிடியை பொறுத்த வரை நிர்வாகம் ஜியோ சினிமாவில் நேரலை செய்ய முடிவு செய்துள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top