Youth Arrested For Sexual Harassment :
சென்னையில் தனியாக நடந்து சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பைக் டாக்சி டிரைவரை (Youth Arrested For Sexual Harassment) போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணாநகர் பகுதியில் கடந்த 15ம் தேதி டியூஷன் சென்றுவிட்டு மாணவி ஒருவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் மாணவி குடை பிடித்தபடி நடந்தார். அந்த நேரத்தில் பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அலறியடித்து அந்த இளைஞரை குடையால் அடித்துள்ளார். மழை பெய்ததால் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் மாணவியின் அலறல் யாருக்கும் கேட்கவில்லை. அதன்பின் அந்த வாலிபர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பியோடினார். அவர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் இளைஞரின் முகத்தை தெளிவாக பார்க்க முடியவில்லை. அதன்பின் அழுது கொண்டே வீட்டுக்கு வந்த மாணவி நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த மாணவியின் தாய், மாணவிக்கு ஆறுதல் கூறினார். பின்னர், சம்பவம் குறித்து மாணவியின் தந்தை கடந்த 16ம் தேதி டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே துணை கமிஷனர் கோபி தலைமையில் செயல்படும் தனிப்படை போலீசார் சரவணக்குமார், புருஷோத்தம்மன், பிரசாத் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த இளைஞரை கைது செய்ய உத்தரவிட்டனர். இதனால் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த வாலிபரின் முகம் மற்றும் அவர் வந்த பைக்கின் பதிவு எண் தெளிவாக தெரியவில்லை.
இருப்பினும் இளைஞர் சென்ற பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த வழக்கில் இளைஞர்கள் பயன்படுத்திய பைக்கின் பெட்ரோல் டேங்க் நிறம் மற்றும் அவர் அணிந்திருந்த டி-சர்ட் ஆகியவை போலீசாருக்கு துருப்புச் சீட்டாக மாறியது. உடனடியாக தனிப்படை போலீசார் அதை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய தயானேஸ்வர் என்பவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு, போலீசார் தயானேஸ்வர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து கீழ்பாக்கம் போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்ட தாயானேஸ்வரன் Bsc படித்துவிட்டு தனியார் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சியில் பணியாற்றி வருகிறார்.
அதே நிகழ்ச்சியில் பணிபுரியும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தயானேஸ்வரின் தந்தை கேபிள் டிவி ஆபரேட்டர். எனவே, பகலில் தனது தந்தைக்கு உதவியாளராக பணிபுரியும் தயானேஸ்வர், இரவில் பைக் டாக்சி டிரைவராகவும் இருந்துள்ளார். சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் சிறுமிகளை தயானேஸ்வர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே அண்ணாநகர், திருமங்கலம் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து, காவல் நிலையங்களில் புகார்கள் வந்துள்ளன.
டி.பி.சத்திரம் காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் பேரில் தயானேஸ்வரை கைது (Youth Arrested For Sexual Harassment) செய்துள்ளோம். அவரது செல்போனை சோதனையிட்டதில் 100க்கும் மேற்பட்ட டெலிகிராம் ஆபாச குழுக்கள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தயானேஸ்வரிடம் விசாரித்த போது பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார். தயானேஸ்வரால் எத்தனை பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த வழக்கில் தயானேஷ்வருக்கு எதிராக சாட்சிகளும் ஆதாரங்களும் உள்ளன. சம்பவத்தன்று, மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானபோது, அவர் தனியாக நின்று தயானேஸ்வரிடம் சண்டையிட்டுள்ளார். அவரை குடையால் அடித்து விரட்டினார். இந்த வழக்கில் மாணவியின் வாக்குமூலம் முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த வழக்கு டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு தயானேஸ்வர் (Youth Arrested For Sexual Harassment) மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.