கென் கருணாஸ் இயக்கி, நடித்திருக்கும் யூத் படம் ஆனது மார்ச் 19, 2026 அன்று வெளியாகி நல்ல ஓப்பனிங் (Youth Review) பெற்றுள்ளது. இப்படம் ஒரு மாணவனின் பள்ளி காதல்களையும், படிப்பு தோல்விகளையும் மற்றும் குடும்ப உணர்வுகளையும் சேர்த்து சிறப்பாக சொல்கிறது.
யூத் படத்தின் படக்குழுவினர் பட்டியல்
இப்படத்தில் கென் கருணாஸ் நாயகனாகவும், தேவதர்ஷினி நாயகனின் அம்மாவாகவும், சுராஜ் வெஞ்சாரமூடு நாயகனின் அப்பாவாகவும் நடித்துள்ளனர். மீனாட்சி தினேஷ், அனிஷ்மா அனில்குமார் மற்றும் ப்ரியான்ஷி யாதவி ஆகியோர் மூன்று கதாநாயகிகளாக வலம் வருகின்றனர். விக்கி ஒளிப்பதிவு ஆனது யூத் புல்லாகவும் மற்றும் கலர்புல்லாகவும் உள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ‘முட்ட கலக்கி’, ‘ஜில்பான்ஸோ’ மற்றும் ‘லவ்வ சொல்லிட்டாளே’ஆகிய காதல் பாடல்கள் சிறப்பாக உள்ளன.
இது ஒரு கலகலப்பான யூத் டிராமா படம் (Youth Review)
கென் கருணாஸ் இயக்கத்தில் யூத் படம் ஒரு கலகலப்பான யூத் டிராமாவாக அரங்கேறியுள்ளது. இயக்குநர் கென் கருணாஸ் படிப்பில் கவனம் செலுத்தாமல் ஜாலியாக இருக்க நினைக்கும் ஒரு மாணவனுக்கு ஏற்படும் காதல்களாலும், மற்றும் குடும்பத்தாலும் கிடைக்கும் அனுபவங்கள் என்னென்ன என்பதை காமெடி, செண்டிமெண்ட் கலந்து இப்படத்தில் சொல்லியிருக்கிறார். யூத் படத்தின் முழுக்கதையும் பள்ளி வாழ்க்கையை மையமாகக் கொண்டு சுழல்கிறது. இப்படத்தின் இறுதியில் மாணவன் பொறுப்பு உணர்வு பெற்று, உண்மையான (Youth Review) காதல் என்ன மற்றும் படிப்பு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்வதாக திரைக்கதை அமைந்துள்ளது.
பாராட்டு பெறும் கென் கருணாஸ் மற்றும் தேவதர்ஷினியின் நடிப்பாற்றல்
கென் கருணாஸ் மற்றும் தேவதர்ஷினி நடிப்பு பாராட்ட தக்க விதத்தில் உள்ளது. ‘யூத்’ நாயகனாக கென் கருணாஸ் 14 வயது மாணவனுக்குரிய உடல்மொழி, சேட்டை, நடனம், காதல் ஆட்டங்கள், தனக்குள் ஏற்படும் குற்றவுணர்வு மற்றும் மனமாற்றம் என அனைத்தையும் (Youth Review) கச்சிதமாக தனது நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். தேவதர்ஷினி தனது மகனுக்கும், மகனின் படிப்புக்கும் எந்தக் குறையும், தடையும் வந்துவிடக் கூடாது என அரும்பாடுபடும் அப்பாவித் தாயாக சிறந்த நடிப்பின் மூலம் நம் மனதைக் கனமாக்குகிறார்.
யூத் படத்தின் விமர்சனங்கள்
படத்தொகுப்பாளர் நாஷ் முதல் பாதி காமெடியாகவும் மற்றும் இரண்டாம் பாதி எமோஷனலாகவும் கணக்குப் போட்டு காட்சிகளை (Youth Review) அடுக்கி தொகுத்து வழங்கியுள்ளார். இந்தப் படம் பள்ளி வாழ்க்கை, காதல் கலாட்டாக்கள் மற்றும் குடும்ப உணர்வுகளைச் சேர்த்து நன்றாக சித்தரித்துள்ளது.
யூத் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இந்தப் படம் வெளியானது முதல் நல்ல ஓப்பனிங் பெற்றுள்ளது. படம் வெளியான முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் Rs.3.2-3.5 கோடி வரை வசூல் பதிவாகியுள்ளது.